உலகின் பெரிய வைர சுரங்கம்

 

வைர சுரங்கம்


                                                           கனடாவின் வடமேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள டியாவிக் வைர சுரங்கம் உலக அளவில் பிரபலமானது. உலகின் மிகப்பெரிய வைர சுரங்கங்களுள் ஒன்றான அங்கு 2018 ஆம் ஆண்டு 552 காரட் மஞ்சள் ரத்தினமான வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

                                             இதுதான் உலக அளவில் மிகப்பெரிய மஞ்சள் நிற வைரமாக அறியப்படுகிறது இந்த சுரங்கத்தில் வெண்மை நிற வைரங்களே அதிக அளவில் எடுக்கப்படுகின்றன. ஆனாலும் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக மஞ்சள் நிற வைரம் கிடைக்கிறது.


ஏலத்திற்கு வரும் மகாராஜாக்களுக்குச் சொந்தமான 

அரிய நீல வைரம்.

                                                       இந்தியாவில் இருந்து பெறப்பட்ட அரிய நீல வைரம் ஸ்விட்சர்லாந்தில் ஏலத்துக்கு வருகிறது. தற்போதைய தெலுங்கானா மாநிலம் கோல் கொண்டாவில் கிடைத்த இந்த 23 கேரட் வைரம், மிக மிக அதிக விலை மதிப்பு உடையதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது 



                                              வருகிற 14-ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெறும் ஏலத்தில், இந்த வைரம் ரூ.300 முதல் ரூ.430 கோடி வரை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல பாரிஸ் நகை வடிவமைப்பாளர் ஜார் வடிவமைத்த மோதிரத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த வைரம், ஒரு காலத்தில் இந்தியாவின் இந்தூர் மற்றும் பரோடா அரச குடும்பங்களின் சொத்தாக இருந்தது. அரச குடும்ப வரலாறு அபூர்வ நிறம் மற்றும் பெரிய அளவு ஆகியவற்றால் கோல்கொண்டா நீல வைரம் உலகிலேயே மிகவும் அரிய நீல வைரங்களில் ஒன்றாக திகழ்கிறது என்று கிரிஸ்டீஸ் ஏல நிறுவனத்தின் நகை பிரிவு உலகத் தலைவர் ராகுல் கடாக்கியா தெரிவித்துள்ளார்.

                                      இந்த வைரத்தின் வரலாறு 4 -நூற்றாண்டுக்கும் முந்தையதாகும் முதன் முதலில் கிபி 327-ல் மாவீரர் அலெக்ஸாண்டர் இந்திய வைரங்களை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றார். இந்த அரிய ரத்தினங்கள் மீது மேற்கத்திய மக்களுக்கு மோகத்தை தூண்டினார். பின்னர் 1292-ம் ஆண்டு மார்க்கோபோலோ இந்தியா வைரங்களின் அழகை தனது பயண குறிப்புகளில் பதிவு செய்தார். மிகவும் பிரபலமான மேற்கண்ட நீல வைரம் 20-ம் நூற்றாண்டில் இந்தூர் மகாராஜா இரண்டாம் யெஷ்வந்த் ராவ் ஹோல்கரின் சேகரிப்பில் இருந்தது. பிற்காலத்தில் வெளிநாடு கொண்டு செல்லப்பட்ட இந்த வைரத்தை 1923 ஆம் ஆண்டு பிரெஞ்சு நகை வடிவமைப்பாளர் சோமே ஒரு மோதிரமாக வடிவமைத்தார். இந்த அபூர்வ வைரம், இந்திய வரலாற்றுச் சின்னமாகவும் உலகப் புகழ்பெற்ற பொக்கிஷமாகவும் திகழ்கிறது.

Post a Comment

0 Comments