TN Schools reopen from 1/9/2021

 9 முதல் 12 வரை பள்ளிகளை திறக்க அனுமதி



1-9-2021 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021- க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

மேலும் பள்ளிகளில்  கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம்  பின்பற்றிடவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • 50% மாணவர்களுடன் பள்ளிகள் (TN Schools) திறக்கப்பட்டால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 
  •  முதல் நாளில் 50% மாணவர்களும், மறுநாள் எஞ்சிய 50% மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும்.
  • அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர்(Sanitizer) சோப்பு கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  •  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்  அனைவரும் 100% கண்டிப்பாக தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
  •  கொரோனா அறிகுறி உள்ள ஆசிரியர்களையும் மாணவர்களையும் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது.
  • முகக்கவசம் அணிதல், அவ்வப்போது கைகளை சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப் பட வேண்டும்.

Post a Comment

0 Comments