TN eSEVAI - APPLY INCOME CERTIFICATE ONLINE

       வருமானச் சான்றிதழ்                         (INCOME CERTIFICATE)                      விண்ணப்பிப்பது எப்படி?

தேவையான ஆவணங்கள்:

      ✅ புகைப்படம்

      ✅ அடையாளச் சான்று

      ✅ ஊதியச் சான்று (OPTIONAL)

      ✅ குடும்ப அட்டை     

      ✅ சுய உறுதிமொழி படிவம்          


எப்படி விண்ணப்பிக்கலாம்:

  1) உங்களுடைய மொபைல் அல்லது லேப்டாப்பில் Chrome Browser-ல்   www.tnesevai.tn.gov.in  என்ற வலைதளத்திற்கு சென்று முதலில் வரும் பக்கத்தை Select செய்யவும். 



2) அடுத்து e-Sevai முகப்பு பக்கத்தில்  பயனாளர் உள்நுழைவு என்பதை தேர்வு செய்யவும்.


3) Login Page Open ஆகும்.  அதில் Login Id, Password and  Captcha வை சரியாக பதிவிட்டு Login என்பதை கிளிக் செய்யவும். அல்லது Login with mobile Number என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டு OTP மூலமும் Login செய்யலாம்.


4) Login ஆன உடன் உங்களுக்கு  Services என்ற பக்கம் Open ஆகும். அதில்  Department Wise என்ற பகுதியில் Revenue Department  என்பதை தேர்வு செய்யவும்.


5) அடுத்து Revenue Department  என்பதில் INCOME CERTIFICATE-ஐ Select செய்யவும்.


6) INCOME CERTIFICATE-ஐ Select செய்தபின் Apply செய்ய தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவை திரையில் தோன்றும். அதை கவனமாக படித்து பார்த்து விட்டு Proceed என்பதை கிளிக் செய்யவும்.


7) அடுத்த பக்கத்தில், உங்களுக்கு ஏற்கனவே CAN NUMBER பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதை பதிவிட்டு,  கேட்கப்பட்ட  மற்ற விவரங்களை பூர்த்தி செய்து   Search என்பதை கிளிக் செய்யவும்.
    
CAN NUMBER (Common Account Number) இல்லை என்றால்     இங்கே கிளிக் செய்து எவ்வாறு பதிவு செய்வது என்பதை அறிந்து CAN NUMBER-ஐ புதிதாக பதிவு செய்யவும்.



8) அதே பக்கத்தில் தோன்றும்  அட்டவணையில் உங்களுடைய  விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதை சரிபார்த்து விட்டு கீழே Mobile Number என்ற இடத்தில் உங்கள் Mobile Number-ஐ உள்ளீடு செய்து Generate OTP என்பதை Click செய்யவும். நீங்கள் பதிவிட்ட Mobile எண்ணிற்கு  வரும் OTP எண்ணை உள்ளீடு செய்து Confirm OTP என்பதை கிளிக் செய்யவும்.


9) அடுத்து You have Successfully Verified OTP என்று தகவல் தோன்றும்.    அதற்கு மேலே Proceed என்பதை கிளிக் செய்யவும்.



10) அடுத்த பக்கத்தில் உங்களுடைய அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டு இருக்கும்.  அவற்றை சரிபார்த்து விட்டு கீழே Details of Family Members என்ற பகுதியில் உங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைவரின் தகவல்களையும்  உள்ளீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரின் தகவல்களை உள்ளீடு செய்த பிறகு Add என்பதை கிளிக் செய்யவும்.
 


11) அதே போன்று அனைவரின் தகவல்களையும்  உள்ளீடு செய்த பிறகு, ஒரு அட்டவணையில் அனைவரின் விவரங்களும் காண்பிக்கப்படும். அவற்றை சரிபார்த்து விட்டு கீழே Submit என்பதை கிளிக் செய்யவும். 


12) அடுத்து Upload Documents என்ற பகுதியில் கேட்கப்பட்ட ஆவணங்களை  கேட்கப்பட்ட அளவுகளில் பதிவேற்றம் செய்யவும். 

அதில் Select Documents என்ற பகுதியில் ஆவணத்தை தேர்வு செய்து, Document No என்ற பகுதியில் அந்த ஆவணத்தின் எண்ணை பதிவிட்டு கீழே உள்ள Add என்பதை கிளிக் செய்தால்  Upload என்ற பட்டன் தெரியும். அதை கிளிக் செய்யவும். 

குறிப்பு: அதில் 4வதாக உள்ள Self Decleration of Applicant என்ற பகுதிக்கு படத்தில் அம்புகுறியிட்டு காட்டப்பட்ட இடத்தில் கிளிக் செய்து Form-ஐ Download செய்து Print எடுத்து அதில் Signature of the Applicant என்ற பகுதியில் கையெழுத்து போட்டு அதை  Scan செய்து Upload  செய்யவும்.



13) அடுத்து நீங்கள் Upload செய்த அனைத்து ஆவணங்களும் கீழே படத்தில் உள்ளது போல தோன்றும்.  அவற்றை சரிபார்த்துவிட்டு Make Payment என்பதை கிளிக் செய்யவும்.


14) அடுத்து Payment Details என்ற பக்கம் தோன்றும் அதில் விவரங்களை சரிபார்த்து                         I Agree to Terms and Conditions என்பதை Tick செய்து   Make Payment என்பதை கிளிக் செய்யவும்.


15) அடுத்து Payment Page-ல் நீங்கள் எந்த வகை பரிவர்த்தனை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும். பிறகு தொகையை சரிபார்த்து விவரங்களை பதிவிட்டு Make Payment என்பதை கிளிக் செய்யவும்.




விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான இரசீதை                  (Receipt) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். Check Status என்ற பகுதியில் search செய்து நமது விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

CAN NUMBER பதிவு செய்ய ➡️ ➡️  CLICK HERE

TNeGA CHECK APPLICATION STATUS  ➡️ ➡️ CLICK HERE


Post a Comment

0 Comments