Women's Self Help Group Loan Interest Rate Reduction

மகளிர் சுய உதவி குழு வட்டி விகிதம் அதிரடியாக  குறைப்பு அமைச்சர் அறிவிப்பு.

12%-இல் இருந்து 3%.                    மகளிர் சுய உதவிக்குழுவில் ரூ.3 லட்சம் வரை  பெற்ற கடன்களுக்கு 12%-இல் இருந்து 3% ஆக வட்டியை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தால் சுமார் 43,39,780 உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இன்று (25/08/2021) கூட்டுறவு துறை சார்பாக விவாதங்கள் நடந்தது.

வட்டி விகிதம் குறைப்பு       அப்போது கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள்  மகளிர் சுய உதவிக்குழுவில் ரூ.3 லட்சம் வரை கடன்களுக்கு 12%இல் இருந்து 3% ஆக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

வட்டி விகித குறைப்பின் மூலம் 3,63,881 குழுக்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். மொத்தம் 43,39,780 உறுப்பினர்கள் இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள் என அவர் கூறினார்.

கடன் தள்ளுபடி:                        முன்னதாக தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். அத்துடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கோரோனா சிறப்பு கடன் உள்பட ரூ20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

மகளிர்க்கு மகிழ்ச்சி                   மகளிர் சுய உதவி குழு வட்டி விகிதம் குறைப்பு என்பது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறக்கூடிய    மிகப்பெரிய அறிவிப்பு ஆகும். ஏனெனில் 12 சதவீத வட்டியில் இதுநாள் வரை கடன் வழங்கப்பட்டது. இனி 3 சதவீத வட்டி என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். இத்திட்டம் தமிழக பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்க கூடிய ஒன்றாகும்.



Post a Comment

0 Comments