AADHAR CARD DOWNLOAD

ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்ய

தற்போது இந்திய நாட்டில்  ஆதார்  என்பது  மக்களின் இன்றியமையாத ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு அன்றாட வாழ்க்கை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். வங்கி கணக்கு  துவக்கம் முதல் ரேஷன் கார்டு பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் அவசியம்.  அரசின் நலத்திட்டங்களை பெற  வேண்டுமானாலும்  சரி, மற்றும்  பல விஷயங்களிலும்  ஆதார் தவிர்க்க முடியாததாக மாறிவிட்ட  சூழ்நிலையில், எப்பொழுதும்  நம்மிடம் ஆதார் கார்டு இருப்பது மிகவும் அவசியம். ஆனால் இது போன்ற முக்கிய ஆவணத்தை நம்முடன் வைத்திருக்கும் போது தொலைந்து போய்விட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே  ஆதார் அட்டையை  பதிவிறக்கம் செய்து     Mobile-ல் சேமித்து வைத்துக் கொண்டால் தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம்.


1) உங்கள் Mobile-ல் Chrome பக்கத்தில் UIDAI என்று டைப் செய்து Search என்பதை கிளிக் செய்யவும். அதில் முதலில் வரும் பக்கத்தில்  Get Aadhar என்பதை Click செய்ய வேண்டும். 

Go to UIDAI page Click here

2)  அடுத்து கீழே Download Aadhar என்று இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.


3) நீங்கள் புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தால், நீங்கள் புகைப்படம் எடுக்கும் போது உங்களுக்கு வழங்கப்பட்ட 14 இலக்கம் கொண்ட EID எண்ணை பதிவிட்டு அதனுடன் உள்ள தேதி மற்றும் நேரத்ததை பதிவிடவும். பின்னர் கேப்ட்சாவை பதிவிட்டு  Send OTP என்பதை கிளிக் செய்யவும்.




Go to UIDAI page Click here

4) ஏற்கனவே ஆதார் அட்டை வைத்து இருந்தால்  Aadhar Number என்பதை கிளிக் செய்து 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு கேப்ட்சாவை பதிவிட வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.

5) அந்த OTP எண்ணை பதிவிட்டு பின் அதற்கு கீழே காணப்படும் இரண்டு கேள்விகளுக்கு YES அல்லது NO என்று SELECT செய்ய வேண்டும். பின் கீழே உள்ள  Verify And Download  என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6) உங்களுக்கான ஆதார் Download ஆகிவிடும்.

7) பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் Password Protected வடிவில் நமக்கு கிடைக்கும்.

 Password -உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள்(XXXX) மற்றும் உங்களின்  பிறந்த    வருடம் (1999)

 Eg.XXXX1999  என்பதை போல  பதிவிட்டால் ஆதார் கார்டு PDF வடிவில் கிடைக்கும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் password type செய்ய வேண்டியுள்ளதால் இதில்  பாதுகாப்பு அதிகம். 


Go to UIDAI page Click here


பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால்  COMMENT செய்யவும்.

 இது போன்ற பதிவுகளை காண  செய்திசுரபி பக்கத்தை FOLLOW செய்யவும்.


Post a Comment

0 Comments