Create Google Form

 Google Form Create செய்வது எப்படி


1) முதலில் Chrome Browser-ல் google forms என்று டைப் செய்யவும். அதில் முதலில் வரும் வலைப்பக்கத்தை தேர்வு செய்யவும்.


2) அடுத்து Forms-ல் Personal என்ற பகுதியில் Go to  google forms என்பதை தேர்வு செய்யவும்.

3) நீங்கள் Google Forms க்கு புதியவராக இருந்தால் உங்களுடைய E-mail I'd மற்றும் password கேட்கும். அதை கொடுத்தால் உள்ளே நுழையும்.

4) அதில் Forms என்ற பகுதியில் Start a New Form-ல் Blank என்பதை தேர்வு செய்யவும்.

5) முதலில் Untitled forms  என்ற பகுதியில் questions என்பதை தேர்வு செய்து அதற்கு கீழ் உள்ள Untitled forms என்பதில் நீங்கள் தேர்வு நடத்த இருக்கும் பாடத்தை Type செய்யவும் (Tamil, English). அதற்கு கீழ் உள்ள Form Describetion என்பதில் என்ன வகையான தேர்வு என்பதை Type செய்யவும்(Slip Test, Unit Test).

6) அடுத்து உள்ள Untitled Forms என்பதில் மாணவர் பெயர் என்று Type செய்யவும். அதற்கு அருகில் உள்ள பகுதியில்  Short Answers என்பதை தேர்வு செய்து கீழே Required என்பதை டிக் செய்யவும்.

7) Required என்பது மாணவர்கள் கேள்விக்கு கண்டிப்பாக விடை அளிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அந்த கேள்விக்கு விடை அளித்தால் மட்டுமே இறுதியில் Submit கொடுக்க முடியும்.


8) அடுத்ததாக மாணவரின் வகுப்பு தேவைப்பட்டால் அடுத்து உள்ள Untitled forms-ல் வகுப்பு என்று Type செய்து அதற்கு அருகில் உள்ள பகுதியில்  Multiple choice என்பதை தேர்வு செய்து Option 1-ல் மட்டும் தேவையான வகுப்பை பதிவு செய்து Required என்பதை Tick செய்யவும்.


9) அடுத்து அருகில் உள்ள (+) ICON-ஐ கிளிக் செய்தால் புதிய Untitled forms தோன்றும். அதில் முதல் கேள்வியை பதிவு செய்யவும்.

10) கேள்வியை பதிவு செய்து விட்டு Multiple Choice என்பதை தேர்ந்தெடுத்து   Option-ல் நான்கு விடைகளை பதிவு செய்துவிட்டு அதற்கு கீழே  Required என்பதை ON செய்யவும்.

11) கேள்வியில் படங்கள் ஏதேனும் பயன்படுத்த வேண்டும் எனில் கேள்வியை Type செய்யும் போது அருகில் உள்ள இந்த Image பட்டனை கிளிக் செய்யவும்.

12) அடுத்து உங்கள் Storage -ல் இருந்து எந்த படத்தை வேண்டுமோ அதை பதிவேற்றி கொள்ளலாம். அல்லது Google Image Search-ல் தேவையான படத்தை Search செய்து பதிவேற்றி கொள்ளலாம்

13) அடுத்து விடைகளுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து காண்போம்.

14) மேலே உள்ள Settings பட்டனை கிளிக் செய்து General என்ற பகுதியில் Limit to 1 response , See summary charts and text responses  ஆகியவற்றை Tick செய்யவும்.


15) அடுத்து Quizzes என்பதை தேர்வு செய்து Make the a Quiz என்பதை ON செய்து தேவையானவற்றை தேர்ந்தெடுத்து  Save என்பதை கிளிக் செய்யவும்.


16 ) பிறகு கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல ஒவ்வொரு வினாவிற்கும் Answer Key என்பதை கிளிக் செய்து சரியான விடையை  Tick  செய்யவும். 


17) சரியான விடையை தேர்வு செய்து விட்டு மேலே Points என்ற இடத்தில் அந்த வினாவிற்கான மதிப்பெண்-ஐ (1) என பதிவுசெய்து விட்டு Done என்பதை கிளிக் செய்யவும்.


18) அவ்வளவு தான்  வினாத்தாள் தயாராகி விட்டது.   இறுதியாக மேலே உள்ள Send பட்டனை கிளிக் செய்யவும். 

19) படத்தில் உள்ளது போல Link பட்டனை கிளிக் செய்தால் ஒரு Link காண்பிக்கும். அதற்கு கீழே Shorten Link என்பதை Tick செய்யவும். அதற்கு கீழே Copy என்பதை கிளிக் செய்து link-ஐ நீங்கள் அனுப்ப வேண்டியவர்களுக்கு Paste செய்து அனுப்பவும்.

20) மாணவர்களுக்கு Link-ஐ  அனுப்பிவிட்டு அதை மாணவர்கள் Attend செய்த பின்,   Response என்பதை கிளிக்  செய்து மாணவர்களின் விடைத்தாள் மற்றும் மதிப்பெண்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

21) அடுத்து படத்தில் உள்ளது போல Excel Icon பட்டனை கிளிக் செய்தால் Results பகுதி முழுவதும் Excel sheet-ல் Download ஆகும்.
 




Post a Comment

0 Comments