7 New Railway Projects in Tamil Nadu

தமிழகத்தில் 7  புதிய ரயில் திட்டப் 

பாதைகளுக்கான சாத்தியக் 

கூறுகள் குறித்து ஆய்வு



தமிழகத்தில் 7 புதிய ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான  சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யும் பணிகளை தெற்கு ரயில்வே    அதிகாரிகள்   தொடங்கி உள்ளனர்.தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பல்வேறு புதிய ரயில் திட்டங்கள் பற்றி ஆய்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது.   இதில் தமிழகத்திற்கான 7 புதிய ரயில் திட்டங்களும் அடங்கும்.


🚅செங்கல்பட்டு – மாமல்லபுரம் (45 கி.மீ),

🚅கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை (40 கி.மீ), 

🚅திண்டுக்கல் – சபரிமலை (106 கி.மீ), 

🚅கள்ளக்குறிச்சி – திருவண்ணமலை (69 கி.மீ), 

🚅கிருஷ்ணகிரி வழி திருப்பத்தூர் - ஓசூர் (101 கி.மீ), 

🚅முசிறி – சென்னை, பெரம்பூர் (350 கி.மீ),

🚅அரியலூர் – நாமக்கல் (108 கி.மீ).

ஆகிய 7 ரயில் திட்டப் பாதைகளுக்கான    சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மக்கள் தொகை விபரம், ரயில் வழித்தடங்களின் விபரம், இணைப்பு வசதி, மண் பரிசோதனை  மற்றும் கட்டமைப்பில் உள்ள சவால்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து இந்த ஆண்டுக்குள் ரயில்வே வாரியத்திடம் அறிக்கை ஒப்படைக்கப்படும் என்றும் அதன்பிறகு  ரயில்வே வாரியம் முடிவு செய்து, ரயில்வே திட்டமாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர்.



Post a Comment

0 Comments