DUPLICATE CARD

                               

நகல் குடும்ப அட்டை விண்ணப்பிக்க


                                                         
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பொருட்கள் வாங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியே ரேசன் கார்டு அவசியமாகிறது. மேலும் வருமான சான்றிதழ்,இருப்பிடச் சான்றிதழ், சாதிச்  சான்றிதழ்,பிறப்பிடச் சான்றிதழ் போன்றவற்றை விண்ணப்பிக்கும்போது சமர்பிக்கக்கூடிய முக்கிய ஆவணமாகவும் ரேஷன் அட்டைகள் பயன்படுகிறது.

இப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில் ஏதேனும் திருத்தம் செய்யவோ, மாற்றம் செய்ய வேண்டுமெனில் பல நாட்கள் அலைய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது நாம் இருக்கும் இடத்தில் இருந்தே மொபைல் அல்லது லேப்டாப் மூலமாக திருத்தம் செய்து கொள்ள முடியும்.

பொதுவாக இது போன்ற முக்கிய ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் எனில், தாலுகா அலுவலகம் சென்று தான் மாற்ற வேண்டியிருக்கும். ஆனால் இன்றோ அப்படியில்லை. அனைத்துத்துறைகளும் அரசு டிஜிட்டல் மயமாக்கி வருகின்றது. அந்த வகையில் TNPDS என்ற இணையதளம் மூலம் நாமே ரேஷன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நகல் குடும்ப அட்டை விண்ணப்பிக்க:

                                    நம்மில் பலரும் ஸ்மார்ட் ரேஷன் கார்டினை தொலைத்து இருப்போம் அல்லது குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்து இருப்போம்.  அல்லது முகவரி  மாற்றம் செய்து இருப்போம். திருத்தம் செய்யப்பட்ட   ஸ்மார்ட் ரேஷன் கார்டினை பெற ஆன்லைனில் எளிமையாக விண்ணப்பிக்கும் முறை பற்றி பார்க்கலாம்.

1) முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்.

 

2) அதில் நகல் குடும்ப அட்டை விண்ணப்பிக்க  என்ற பகுதியை தேர்தெடுங்கள்.

3) ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்- ஐ பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்ட்சா-வை பதிவு செய்து SUBMIT கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP-ஐ பதிவுசெய்யுங்கள்.

4) அதில் உங்கள் ஸ்மார்ட் கார்டு விவரங்கள் வரும் அதில் உள்ள விபரங்களை சரிபார்த்து விட்டு மறுபதிப்பு கோரிக்கை வகை என்பதை தேர்வு செய்து சரியான கோரிக்கையை தேர்ந்தெடுக்கவும்.


5) அடுத்து சரியான காரணத்தை டைப் செய்து கீழே டிக் செய்து தொடர என்பதை கிளிக் செய்யவும். 


6) விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். அந்த குறிப்பு எண் - ஐ வைத்து நகல் மிண்ணனு குடும்பவிண்ணப்பத்தின்    நிலை  என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள். அல்லது கீழே உள்ள Link - ஐ கிளிக் செய்யவும்.




அட்டை தொடர்பான சேவை நிலை அறிய https://www.tnpds.gov.in/pages/servicerequest/service-request-status-1.xhtml


பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால் comment செய்யவும்.


இது போன்ற பதிவுகளை காண செய்திசுரபி பக்கத்தை FOLLOW செய்யவும்.


Post a Comment

0 Comments