COVID-19 VACCINE CERTIFICATE


COVID-19 VACCINE CERTIFICATE

 கொரோனா வைரஸ் தொற்று  உலகின் பல நாடுகளிலும் வேகமாக பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தடுக்கும் முறைகள்:

இந்த கொடிய  கொரோனா வைரஸில் இருந்து நம்மை  தற்காத்துக் கொள்ள நிறைய வழிகள் உள்ளது.

1. அடிக்கடி கை கழுவ வேண்டும்.

2. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும்.

3. சரியான முறையில் மாஸ்க் அணிய வேண்டும். 

4. மற்றவர்களிடம் இருந்து குறைந்தது  3 அடி தள்ளி இருக்க வேண்டும்.

5.கூட்டமாக இருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும்.

 கோவிட்-19 தடுப்பூசிகள்:

                                    மேற்கண்ட தற்காப்பு முறைகள்  மூலம் கொரோனா வைரஸ் பரவாமல்  தடுக்க முடியும் என்றாலும் COVID-19க்கு எதிரான போரில் தடுப்பூசிகள் மட்டுமே  தற்காலிக தீர்வாக இருக்கிறது. இது நோயின் தீவிரத்தை குறைக்கிறது மற்றும் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது  மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கையையும்  குறைக்கிறது. எனவே கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் தவறாமல் எடுத்து கொள்வது நல்லது என மக்களுக்கு அரசு பரிந்துரைக்கின்றது.

                     கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் அல்லது இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள் அதற்கான  சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும். தற்போது இந்த சான்றிதழ் இருந்தால் தான் பல்வேறு  நாடுகள், மாநிலங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. 

 கோவிட் -19 தடுப்பூசிக்கான சான்றிதழ் பதிவிறக்கம்

 கோவிட் -19 தடுப்பூசிக்கான சான்றிதழை  UMANG APP, AAROGYA  SETU APP, DIGILOCKER APP,  WHATSAPP  மற்றும் COWIN Website போன்றவற்றின் மூலம்  பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். 

 WHATSAPP  மூலம்   கோவிட் -19 தடுப்பூசிக்கான சான்றிதழை பதிவிறக்கம்  செய்யும் வழிமுறைகள்:

1) முதலில் உங்களுடைய Mobile Whatsapp-ல்  இருந்து '9013151515' என்ற எண்ணிற்கு   Download Certificate என்று  Message  அனுப்பவும். 

 


2) Message அனுப்பியவுடன் உங்கள் Mobile எண்ணிற்கு 6 இலக்க OTP  எண் அனுப்பப்படும்.


3) OTP  எண்ணை  TYPE செய்து அனுப்பவும்.

4) அதன்பின் உங்கள் மொபைலுக்கு அந்த எண்ணில்  தடுப்பூசிக்காக பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் வரிசையாக காட்டும்.


5) அதில் உங்கள் பெயருக்கு நேராக உள்ள எண்-ஐ TYPE செய்து அனுப்பவும்.


6) அடுத்து உங்களுடைய COVID 19 Vaccination Certificate PDF வடிவில் உங்களுக்கு அனுப்பப்படும்.

அதை DOWNLOAD செய்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 

 மேலே உள்ள எண்ணில் இருந்து Whatsapp மூலமாக நமது பகுதியின் அஞ்சல் குறியீட்டு எண்ணை பதிவிட்டால் நமது சுற்று வட்டாரப் பகுதியில் எங்கெல்லாம் கொரானா தடுப்பூசி போடப்படுகிறது மற்றும் எந்த தேதியில் எவ்வளவு தடுப்பூசி யார் யாருக்கு போடப்படும் என்ற தகவலும் உடனடியாக அனுப்பப்படும். மேலும் இந்த எண்ணின் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிவு செய்து கொள்ளவும் முடியும்.


பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால் comment செய்யவும்.

இது போன்ற பதிவுகளை காண செய்திசுரபி பக்கத்தை FOLLOW செய்யவும்.


Post a Comment

1 Comments