7.5% Reservation for Govt school students

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  7.5 சதவீத இட ஒதுக்கீடு  

தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு- பேரவையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்கள்,   இன்று   (26/08/2021)   சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமையின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்குவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று,  இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாப்படி, அரசுப்பள்ளியில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு அவர்களது 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் சட்ட படிப்புகளில்  முன்னுரிமை வழங்கப்படும்.







 .

 

 


Post a Comment

0 Comments