TNPSC - CREATE A PERMANENT REGISTRATION - 2021

 TNPSC - நிரந்தர பதிவு செய்யவது எப்படி?

1) உங்களுடைய மொபைல் அல்லது லேப்டாப்பில் Chrome Browser-ல் tnpsc.gov.in என்று டைப் செய்யவும். அதில் முதலில் வரும் website-ஐ கிளிக் செய்யவும்.


2) அடுத்து TNPSC முகப்பு பக்கத்தில் Candidate Corner என்ற பகுதியில் New User என்பதை கிளிக் செய்யவும்.

3) அடுத்து உள் நுழைந்தவுடன் நிரந்தரப் பதிவு என்ற பகுதியில் பயனாளர் குறியீட்டினை  (User Code) உருவாக்குக என்ற இடத்தில் உங்களுக்கான புதிய User Id டைப் செய்ய வேண்டும். அது எழுத்து மற்றும் எண் கலந்ததாக இருக்க வேண்டும். (Eg- abcd123). கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்கிற்கு விடையை டைப் செய்து பயனாளர் குறியீடு உள்ளதா? என செக் செய்து கொள்ளவும்.

4)  உங்களுக்கான பயனாளர் குறியீடு கிடைத்தவுடன் கீழே புதிதாக கடவுச்சொல் (Password) உள்ளீடு செய்து தொடர்க என்பதை கிளிக் செய்யவும். 

5) அடுத்ததாக கேட்கப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்யவும் 


6) அடுத்ததாக SSLC Details என்ற பகுதியில் உங்களுடைய SSLC Mark Sheet-ல் உள்ள விவரங்களை பதிவிட்டு உங்களுடைய முகவரியை சரியாக பதிவிடவும்.


7) அனைத்து  தகவல்களும்      உள்ளீடு செய்து விட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை கவனமாக படித்து பார்த்து கீழே உள்ள கட்டணம் செலுத்தவும் தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.


8) அடுத்த பக்கத்தில் உங்களுடைய விவரங்களை சரிபார்த்து விட்டு Select Payment Categery என்பதில் உங்களுடைய வங்கியை தேர்வு செய்யவும். Payment Type என்ற பகுதியில் நீங்கள் பணம் கட்ட விரும்பும் முறையை தேர்வு செய்து கீழே உள்ள Option-ல் Select செய்து Proceed to Pay என்பதை கிளிக் செய்யவும்.


9) Proceed to Pay என்பதை கிளிக் செய்து கட்டணம் செலுத்திய பிறகு மறுபடியும் Payment Page-ல் உள்ளே சென்று View Previous Payment என்பதை கிளிக் செய்து கட்டணம் செலுத்தியதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்கள் Payment செலுத்தாத பட்சத்தில் உங்கள் பெயருக்கு நேராக தோன்றும் Activate என்பதை கிளிக் செய்யவும்.


10) Activate செய்த பிறகு திரையில் உங்கள் பெயர் தோன்றும் கீழே Login / Continue to your Dashboard என்பதை கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய User Id மற்றும் Password-ஐ கொண்டு உங்கள் Account-ஐ Login செய்யவும்.


11)  Login செய்த உடன் உங்களுடைய ஆதார் எண்ணை Verify செய்வதற்கு ஆதார் எண்ணை டைப் செய்யவும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.  OTP-ஐ பதிவு செய்தவுடன் உங்களுக்கான Candidate Dashboard திரையில் தோன்றும்.



12) CANDIDATE DASHBOARD-ல் PROFILE என்பதை கிளிக் செய்து விடுபட்ட தகவல்களை சேர்க்கவும்.



13) உங்களுடைய PROFILE-ல் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால் EDIT PROFILE என்பதை கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

உங்களுடைய PROFILE-ல் திருத்தம் செய்வது எப்படி என அறிய இங்கே கிளிக் செய்யவும்.




  PROFILE EDIT ➡️➡️ CLICK HERE


ONE TIME REGISTRATION RENEWAL - 2021  ➡️➡️ CLICK HERE



Post a Comment

0 Comments