DOWNLOAD e-SMART CARD


e-SMART CARD பதிவிறக்கம் செய்ய:

                                          தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், குடும்பத்தலைவர் மாற்றம், அட்டை வகை மாற்றம் போன்ற திருத்தங்கள் செய்யும்போது நாம் செய்த திருத்தங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்று செக் செய்ய ஸ்மார்ட் கார்டு டவுன்லோட் செய்வது பயன்படுகிறது. இவ்வாறு டவுன்லோட் செய்யப்படும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி அல்லது அடையாளச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும். அதை கொண்டு நாம் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாது.

1)முதலில் www.tnpds.gov.in என்ற இணைய தளம் செல்லவும்.


2) அதில் பயனாளர் நுழைவு என்ற பகுதியை தேர்தெடுக்கவும்.


3) ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்-ஐ பதிவு செய்யவும். அடுத்து கேப்ட்சாவை பதிவு செய்து SUBMIT கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP-ஐ பதிவு செய்யவும்.

4) Login ஆன உடன் உங்களுடைய விவரங்கள் திரையில் தெரியும். அதை சரிபார்த்து கொள்ளவும். கீழே மின்னணு அட்டை கோப்பு பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்து உங்கள் குடும்ப அட்டை நகலை பதிவிறக்கம் செய்யவும்.




பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால் comment செய்யவும்.


இது போன்ற பயனுள்ள பதிவுகளை பெற செய்தி சுரபி பக்கத்தை Follow  செய்யவும்.

Post a Comment

0 Comments