SOPs related to re-opening of TN Schools

 

9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 


தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கினால் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா முன்னெசரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:

  •  50% மாணவர்களுடன் பள்ளிகள் (TN Schools) திறக்கப்பட்டால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 
  •  முதல் நாளில் 50% மாணவர்களும், மறுநாள் எஞ்சிய 50% மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும்.
  • அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர்(Sanitizer) சோப்பு கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  •  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்  அனைவரும் 100% கண்டிப்பாக தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
  •  கொரோனா அறிகுறி உள்ள ஆசிரியர்களையும் மாணவர்களையும் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது.
  • முகக்கவசம் அணிதல், அவ்வப்போது கைகளை சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப் பட வேண்டும்.
  •  பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வைட்டமின்-C மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும்.
  • அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
  • 6 அடி இடைவெளி கட்டாயம்; சூழலுக்கேற்ப திறந்தவெளியில் வகுப்புகளை நடத்தலாம்.

எனினும், கொரோனா தொற்றின் நிலை சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் படி, செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதன் பிறகு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

Post a Comment

0 Comments