eSevai CAN REGISTER

eSevai - CAN REGISTER

             பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், போன்றவற்றை பெற வட்டாச்சியர் அலுவலகம் செல்ல வேண்டும். ஆனால் இப்போது தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் எனும் அமைப்பை உருவாக்கி எளிமை படுத்தினாலும் அதற்கும் நாம் இ-சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது அல்லது அங்கேயும் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பிக்க வேண்டி உள்ளது. 

                                     இதற்காக செலவிடும் நேரமோ அதிகமாக உள்ளது. இவற்றை தவிர்க்க நாம் வீட்டில் இருந்தே மொபைலிலோ அல்லது லேப்டாப்பிலோ எளிய முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின்னர் விண்ணப்பத்தின் நிலையை நாமே மொபைலிலேயே அறிந்து கொள்ளலாம். பின்னர் ஆவணங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் சான்றிதழை நாமே பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முன் இ-சேவை இணையதளத்தில் CAN REGISTRATION செய்ய வேண்டியது அவசியம், நமக்கான CAN நம்பர் Create செய்த பின் ஒவ்வொரு முறை நமக்கு தேவையான சான்றிதழ்களை பெற அதை பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் TNeSEVAI தளத்தில் உங்களுக்கென USER ID -ஐ  Create  செய்வது பிறகு CAN NUMBER-ஐ எப்படி உருவாக்குவது என்று எளிய முறையில் படிப்படியாக படத்துடன் கூடிய விளக்கத்தை இங்கே காணலாம். 

1) உங்களுடைய மொபைல் அல்லது லேப்டாப்பில் Chrome Browser-ல் www.tnesevai.tn.gov.in என்ற வெப்சைட்க்கு சென்று முதலில் வரும் பக்கத்தை Select செய்யவும்.

2) அடுத்து e-Sevai முகப்பு பக்கத்தில் பயனாளர் உள்நுழைவு என்பதை தேர்வு செய்யவும்.


3) அடுத்து Sign in பக்கத்தில் New User? SignUp here என்பதை தேர்வு செய்யவும்.


4) அடுத்து Registration பக்கத்தில் பெயர், மாவட்டம், வட்டம், கைபேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்து விட்டு உங்களுக்கான Login Id & Password-ஐ புதிதாக உருவாக்க வேண்டும்.


5) அடுத்து கேப்ட்சாவை பதிவு செய்து Sign Up என்பதை கிளிக் செய்யவும்.


6) அடுத்து நீங்கள் பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதை பதிவு செய்து Verify OTP என்று கொடுத்த உடன் SUCCESS என்று வரும்.


7)அதில் Click here to Login என்பதை கிளிக் செய்தால் Login Page Open ஆகும் அதில் Login Id, Password and Captcha வை சரியாக பதிவிட்டு Login என்பதை கிளிக் செய்யவும்.



8) Login ஆன உடன் உங்களுக்கு Services என்ற பக்கம் Open ஆகும். அதில்  Department Wise என்ற பகுதியில் Revenue Department என்பதை தேர்வு செய்யவும்.



9) அடுத்து Revenue Department என்பதில் ஏதாவது ஒரு CERTIFICATE-ஐ Select செய்யவும்.



10) அடுத்து தேவையான ஆவணங்கள், கட்டணம் ஆகியவை காண்பிக்கப்படும் அதை கவனமாக படித்து பார்த்து விட்டு Proceed என்பதை கிளிக் செய்யவும்.



11) அடுத்த பக்கத்தில், உங்களுக்கு ஏற்கனவே CAN NUMBER இருந்தால் கீழே கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து Search என்பதை கிளிக் செய்யவும்.


12) CAN NUMBER ஏற்கனவே பதிவு செய்யாதவர்கள், Register Can என்ற பகுதியை தேர்வு செய்யவும்.


13)  இப்போது விவரங்கள் பதிவு செய்வதற்கான பக்கம் காண்பிக்கப்படும் அதில் Applicant Details என்ற பகுதியில் கவனமாக படித்து உங்களுடைய விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யவும்.


14) அடுத்து தற்போதைய முகவரி என்ற இடத்தில் நீங்கள் வசிக்கும் வீட்டின் முகவரியை பிழை இல்லாமல் பதிவிடவும். நீங்கள் இருப்பது நிரந்தர முகவரியாக இருப்பின் If Permanent Address Same As Current Address என்ற பகுதியை டிக் செய்யவும். இல்லை என்றால் நிலையான வீட்டு முகவரி என்ற பகுதியை பூர்த்தி செய்யவும்.


15) அடுத்து Contact Details என்ற பகுதியில் தொலைபேசி எண் மற்றும் Email Id ஆகியவற்றை பதிவு செய்து Generate OTP என்பதை கிளிக் செய்யவும், நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதை பதிவிட்டு Verify செய்து Register என்பதை கிளிக் செய்யவும்.


16) பதிவு செய்த பின்னர் உங்களுக்கான CAN NUMBER வரும் அதை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

இந்த CAN NUMBER ஐ பயன்படுத்தி TNeGA இணையதளத்தில் நமக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


OFFICIAL WEBSITE - CLICK HERE 


இப்பதிவு சார்ந்த கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு Comment செய்யவும்.

இது போன்ற பயனுள்ள பதிவுகளை காண செய்திசுரபி  பக்கத்தை  Follow  செய்யவும்.






Post a Comment

0 Comments