EMPLOYMENT LAPSED RENEWAL

EMPLOYMENT LAPSED RENEWAL


தமிழக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2017,2018 மற்றும் 2019 ம் வருடங்களில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு தங்கள் பதிவை ONLINE மூலம் புதுப்பித்து கொள்ள தமிழக அரசு 3 மாதங்கள் (28/5/2021 முதல் 27/8/2021 வரை) சிறப்பு கால அவகாசம் வழங்கியுள்ளது.

 அதன்படி 1/1/2017 முதல் 31/12/2019 வரை தங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் பதிவை ONLINE-ல்புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் 1/1/2017 க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களுக்கு இது பொருந்தாது.

 இச்சலுகையைப் பெற விரும்பும் நபர்கள் , அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் . 

( i ) மூன்று மாதங்களுக்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.

( ii) 1.1.2017 - க்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

அரசாணை வெளியிடப்பட்ட 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது மிகக்குறைந்த நாட்கள் மட்டுமே  உள்ளது. 

1) முதலில் Chrome Browser-ல் tnvelaivaaippu.gov.in/Empower என்ற வளைதளத்திற்கு செல்லவும்.

2) முதலில் வரும் Page-ஐ Click செய்து உள்ளே செல்லவும். Login Page-ல் கொடுக்கப்பட்டுள்ள Renewal என்பதை கிளிக் செய்யவும். 



3)அடுத்து உங்களுடைய விவரங்கள் திரையில் தெரியும் அதை சரிபார்க்கவும்.


4) அடுத்து இடது பக்கத்தில் Update Profile என்பதை கிளிக் செய்யவும். கீழே Renewal என்பதை கிளிக் செய்தால் Candidate Renewal என்பதை கிளிக் செய்யவும்.


5) அடுத்ததாக Renewal Details என்ற பகுதி Open ஆகும். அதில் கேட்கப்பட்டதை கவனமாக பூர்த்தி செய்து Renew என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


6) அடுத்ததாக வலது பக்கத்தில் இருக்கும் Home பட்டனை கிளிக் செய்து Print Id Card என்பதை கிளிக் செய்து உங்களுடைய Employment Renewal Card-ஐ Download செய்து கொள்ளலாம்.

7) அதில் தற்போதய பதிவு புதுப்பிக்க பட்டுள்ளதா, அடுத்த புதுப்பிக்கும் தேதி ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளவும். 

சிறப்பு கால அவகாசம் - 28/05/2021 to 27/08/2019

அரசாணை எண் - GO NO : 204 , DATE : 28.05.2021

OFFICIAL WEBSITE - CLICK HERE 


இப்பதிவு சார்ந்த கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு Comment செய்யவும்.

இது போன்ற பதிவுகளை காண செய்திசுரபி பக்கத்தை Follow செய்யவும்.





Post a Comment

0 Comments