VIDYALAKSHMI EDUCATION LOAN SCHEME


VIDYALAKSHMI EDUCATION  LOAN SCHEME

  பொருளாதார சூழல் காரணமாக  பட்ட மேற்படிப்பு என்பது பலருக்கு  கனவாகவே முடிந்து விடுகிறது. இன்றும்  கிராமப்புற மாணவர்களுக்கு  கல்விக்கடன் பெறுவது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. காரணம் கல்வி கடன் பெற எங்கே விண்ணப்பிப்பது, எப்படி விண்ணப்பிப்பது, விவரங்களை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்பது பலருக்கும் தெரியாமல் இருப்பதே ஆகும்.

      தற்போது 12ம் வகுப்பு முடித்து விட்டு மேற்படிப்பு படிக்க உள்ள மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதை எளிமையாக்க மத்திய அரசு 'வித்யா லட்சுமி கார்யகிரம்' எனும் இணையதளத்தை உருவாக்கி உள்ளது. 

இந்த இணையதளத்தில் 30-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளது. பொறியியல், மருத்துவம் மற்றும் சட்ட மேற்படிப்பு என அனைத்து படிப்பிற்கும் விண்ணப்பிக்க முடியும். ஒன்றிற்கு மேற்பட்ட வங்கிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். 

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்விக்கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும்.  

 வங்கிகளுக்கு இடையே வட்டி விகிதம் மற்றும் குறைந்தபட்ச தகுதி அளவு (MINIMUM CRITERIA) மாறுபடும் என்பதால் கவனமாக,  சரியான வங்கி மற்றும் LOAN SCHEME-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும்.  

எவ்வளவு பெறலாம்:

இந்தியாவிற்குள் படிக்கும் மாணவர்கள் ரூ.10 இலட்சம் வரை பெறலாம்.

*️⃣4  இலட்சம் வரை பெற பொறுப்புதாரர் கையொப்பம் தேவையில்லை.

*️⃣4 இலட்சம் முதல் 6.5 இலட்சம் வரை பெறுவதற்கு பொறுப்புதாரர் ஒருவர் கையொப்பம் இட வேண்டும்.

*️⃣6.5 இலட்சம் முதல் 10  இலட்சம் வரை பெறுவதற்கு பொறுப்புதாரர் கையொப்பம் மற்றும் அடமானப் பத்திரம் (COLLATERAL) வேண்டும். 

முக்கிய சான்றிதழ்கள்:

1.பெற்றோர் மற்றும் மாணவரின் PAN CARD

2.ஆதார் கார்டு

3.பெற்றோரின் 6 MONTHS BANK STATEMENT

4.பெற்றோர் மற்றும் மாணவரின் புகைப்படம்

5.COLLEGE ADMISSION LETTER

6. FEE STRUCTURE CERTIFICATE FOR ALL YEAR

7.IT eFILING , FORM 16

 

        கீழ்க்கண்ட எளிய வழிகளைப் பின்பற்றி    இனணயதளத்தில் நாமே   APPLY செய்யலாம்.

1) முதலில் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

2)  அதில் Register (or) Apply now என்பதை கிளிக் செய்து உங்களுக்கான Account-ஐ Create செய்து கொள்ளவும்.


3) அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து SUBMIT கொடுத்தால் உங்களுக்கான ACCOUNT உருவாக்கப்படடு விடும்.



4)   அடுத்து உங்களுக்கு Account Activation செய்வதற்காக உங்களுடைய E-Mail-க்கு Link ஒன்று அனுப்பப்படும். அந்த Link-ஐ Click செய்தால் Account Registered  Successfully என்று வரும்.

5) அடுத்து Login என்பதை கிளிக் செய்து Student Login என்பதை கிளிக் செய்து நீங்கள் பதிவு செய்த போது கொடுத்த User Id & Password-ஐ பயன்படுத்தி Login செய்யவும்.


6) அடுத்து உங்களுக்கான ACCOUNT-ல் Search and Apply for Loan Scheme என்பதை கிளிக் செய்யவும்.


7) அதில் Search By என்பதில் முதலில் India என்பதை தேர்வு செய்யவும். அடுத்து உங்களுடைய Course-ஐ தேர்வு செய்து, உங்களுக்கு தேவையான Loan Amount-ஐ தேர்வு செய்து  Search என்பதை கிளிக் செய்யவும்.


8) அடுத்து உங்களுக்கு எந்தெந்த வங்கிகளில் Loan Available உள்ளது என்பது திரையில் தோன்றும்.


9) மேலே Loan Application Form என்பதை தேர்வு செய்து, அதில் முதலில் Instructions என்பதில் உள்ளவற்றை கவனமாக படித்துவிட்டு NEXT என்பதை கிளிக் செய்யவும்.


 10) அடுத்து Basic Information என்பதில் உங்களுடைய விவரங்களை பதிவு செய்து விட்டு NEXT என்பதை கிளிக் செய்யவும்.  ஒவ்வொரு பக்கத்திலும் கேட்கப்பட்டு உள்ள விவரங்களை பதிவு செய்து விட்டு Save என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.


11) அடுத்து Personal Information என்பதை கிளிக் செய்து உங்களுடைய விவரங்களை கவனமாக பதிவிட்டு NEXT என்பதை கிளிக் செய்யவும்.


12) அடுத்து Present Banker Details என்பதில் உங்களுடைய Bank Account Details-ஐ பதிவிட்டு NEXT கிளிக் செய்யவும்.



13) உங்களுடைய Course Details என்பதை கிளிக் செய்து Name of the Institution, Name of the Course போன்ற விவரங்களை பதிவிட்டு NEXT என்பதை கிளிக் செய்யவும்.

14) அடுத்து Cost of Finance Details என்பதை கிளிக் செய்து ஒவ்வொரு வருடத்திற்கு உண்டான தொகைகளை சரியாக பதிவிட்டு NEXT என்பதை கிளிக் செய்யவும்.


15) இறுதியாக Upload Documents என்தை கிளிக் செய்து கேட்கப்பட்ட
ஆவணங்களை கேட்கப்பட்ட அளவுகளில் சரியாக பதிவேற்றம் செய்யவும்.


       இவை அனைத்தையும் சரிபார்த்து முடித்த பிறகு Submit கொடுக்கவும். 

16)  நீங்கள் SUBMIT செய்த பிறகு உங்களுக்கு Application Id உருவாகும். அதைப் பயன்படுத்தி நீங்கள் Application Status என்பதில் சரிபார்த்துக் கொள்ளலாம்.



Post a Comment

1 Comments

  1. Your blog has helped me with information on education loans. Thank you education loan how to apply

    ReplyDelete