Do you know this?

  

இந்த தகவல் தெரியுமா உங்களுக்கு


வருவாய் துறையில் உள்ள இந்த ஆவணங்கள் எதைக் குறிக்கிறது?

1) பட்டா - ஒரு நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்த்துறை அளிக்கும் சான்றிதழ். அதாவது நில உரிமைச் சான்று.

2) சிட்டா - குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

3) அடங்கல் - நிலத்தின் பரப்பளவு. அதன் பயன்பாடு கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதியில் உள்ளது என்கிற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

4) கிராம நத்தம் - ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள  நிலம்.

5) கிராம தானம் - கிராமத்தின் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

6) தேவதானம் - கோயில் பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

7) இனாம்தார் - பொது நோக்கத்திற்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்கும் சொல்.

8) விஸ்தீரணம் - நிலத்தின் பரப்பளவு எல்லைகளை குறிப்பது.

9) ஷரத்து - பிரிவு.

10) இலாகா - துறை.

11) கிரயம் - நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்தல்.

12) வில்லங்க சான்று - ஒரு நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும். எவ்வாறு வாங்கினார்கள், எவ்வாறு அந்த நிலத்தை அனுபவிக்கிறார்கள் போன்றவற்றை அலசும் பதிவுத்துறை ஆவணம்.

13)  புல எண் - நில அளவை எண்.


பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால்  comment செய்யவும்.

இது போன்ற பதிவுகளை காண செய்திசுரபி பக்கத்தை FOLLOW செய்யவும்.


Post a Comment

0 Comments