CHANGE ADDRESS

முகவரி மாற்றம் செய்ய


                                                            தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பொருட்கள் வாங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியே ரேசன் கார்டு அவசியமாகிறது. மேலும் ரேஷன் கார்டு ஒரு முக்கிய அடையாள சான்றாக கருதப்படுமகிறது. 

இப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில் ஏதேனும் திருத்தம் செய்யவோ, மாற்றம் செய்ய வேண்டுமெனில் தாலுகா அலுவலகத்தில் மனு செய்து பல நாட்கள் அலைய வேண்டிய நிலை இருந்தது. அல்லது இ- சேவை மையத்திற்கு செல்ல வேண்டும் . ஆனால் இப்போது நாம் இருக்கும் இடத்தில் இருந்தே மொபைல் அல்லது லேப்டாப் மூலமாக   TNPDS என்ற இணையதளம் மூலம் நாமே ரேஷன் கார்டில் முகவரியை  மாற்றிக் கொள்ள முடியும்.

ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய: 

நாம் வேலை மாற்றம், சொந்த ஊருக்கு செல்லுதல், ரேஷன் கார்டில் முகவரியில் பிழை இருந்தால் மாற்றம் செய்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக  ரேஷன் கார்டில் முகவரியை மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. முகவரி மாற்றம் செய்ய தற்போது வசிக்கும் புதிய முகவரிக்கான ஆவணச்சான்று அவசியம். 

ஆவணங்கள்:

1. ஆதார் அட்டை (Aadhar card)

2.வாக்காளர் அடையாள அட்டை (Voter Identity card)

3.எரிவாயு நுகர்வோர் அட்டை ( Gas Consumer Card)

4.வரி இரசீது (வீடு உரிமையாளர்)-(Tax Receipt  for House Owners)

5. வாடகை ஒப்பந்தம் ( வாடகைக்கு குடியிருப்போர்)-(Rent Agreement)

1) முதலில் www.tnpds.gov.in என்ற இணைய தளம் செல்லவும்.


2) அதில் முகவரி மாற்றம் செய்ய என்ற பகுதியை தேர்தெடுக்கவும்.


3) ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்-ஐ பதிவு செய்யவும். அடுத்து கேப்ட்சாவை பதிவு செய்து SUBMIT கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP-ஐ பதிவு செய்யவும்.


4) அதில் சேவையை தேர்வு செய்யவும் என்ற இடத்தில் முகவரி மாற்றம் என்பதை தேர்வு செய்யவும்.


5) புதிய முகவரி விவரங்கள் என்ற இடத்தில் உங்கள் புதிய முகவரியை கவனமாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
6) மற்ற ஆவணங்கள் என்ற பகுதியில் உங்கள் புதிய முகவரிக்கான ஆவணச்சான்றை  தேர்ந்தெடுக்க வேண்டும் அதன்பின் பதிவேற்று என்பதை கிளிக் செய்யவும்.

6) இறுதியில் உறுதிப்படுத்தல் என்ற பகுதியை டிக் செய்து பதிவு செய்ய என்பதை கிளிக் செய்யவும்.

7) விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். அந்த குறிப்பு எண் - ஐ வைத்து அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள். அல்லது கீழே உள்ள Link - ஐ கிளிக் செய்யவும்.

அட்டை தொடர்பான சேவை நிலை அறிய : 

https://www.tnpds.gov.in/pages/servicerequest/service-request-status-1.xhtml

பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால் comment செய்யவும்.

இது போன்ற பதிவுகளை காண செய்திசுரபி பக்கத்தை FOLLOW செய்யவும்.


Post a Comment

0 Comments