ADD FAMILY MEMBER


ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்க்க

 தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பொருட்கள்வாங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியே ரேசன் கார்டு அவசியமாகிறது. மேலும் வருமான சான்றிதழ்,இருப்பிடச் சான்றிதழ், சாதிச்  சான்றிதழ்,பிறப்பிடச் சான்றிதழ் போன்றவற்றை விண்ணப்பிக்கும்போது சமர்பிக்கக்கூடிய முக்கிய ஆவணமாகவும் ரேஷன் அட்டைகள் பயன்படுகிறது.

இப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில் ஏதேனும் திருத்தம் செய்யவோ, மாற்றம் செய்ய வேண்டுமெனில் பல நாட்கள் அலைய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது நாம் இருக்கும் இடத்தில் இருந்தே மொபைல் அல்லது லேப்டாப் மூலமாக திருத்தம் செய்து கொள்ள முடியும்.

பொதுவாக இது போன்ற முக்கிய ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் எனில், தாலுகா அலுவலகம் சென்று தான் மாற்ற வேண்டியிருக்கும். ஆனால் இன்றோ அப்படியில்லை. அனைத்துத்துறைகளும் அரசு டிஜிட்டல் மயமாக்கி வருகின்றது. அந்த வகையில் TNPDS என்ற இணையதளம் மூலம் நாமே ரேஷன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்க்கை:

இன்று ரேஷன் கார்டில் புதிதாக உறுப்பினர் பெயரை எப்படி ஆன்லைனில் சேர்ப்பது என பார்க்க இருக்கிறோம். புதியதாக திருமணமானவர்கள்   தங்களது பழைய ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்கிய பின்னரே தங்களது கணவரின் குடும்ப அட்டையில் பெயரை சேர்க்க முடியும். மேலும் ரேசன் கார்டு வைத்து இருப்பவர்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையை கொண்டு ஆன்லைனில் கீழ்கண்ட வழிகளில் எளிமையாக நாமே செய்து கொள்ளலாம்.

உங்கள் மொபைலில் Chrome Browser -ஐ Open செய்து கொள்ளவும்.

1. www.tnpds.gov.in என்று டைப் செய்து Enter-ஐ கிளிக் செய்யவும்.

குடும்ப அட்டையில் (RATION CARD)  உறுப்பினர் பெயர் சேர்ப்பது எப்படி?


2) அதில் உறுப்பினரை சேர்க்க  என்ற பகுதியை தேர்தெடுக்கவும்.



3) ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவிடவும், அடுத்து கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்து Submit கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP-யை பதிவுசெய்யுவும்.



4) அதில் புதிதாக சேர்க்க வேண்டிய உறுப்பினர் விவரங்கள் பெயர், ஆங்கிலத்திலும் தமிழிலும்,பிறந்த தேதி மாதம் வருடம், ஆண்/பெண், உறவுமுறை, என அனைத்தையும் கவனமாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யவும்.



5) அடுத்தாக குடும்ப உறுப்பினரின் ஆதார் எண்-ஐ பதிவு செய்யவும்.



6) அடுத்து உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்யவும்.



7) அதற்கு கீழே அட்டவணையில் உறுப்பினரின் விவரம் தெரியும், அதை சரி பார்த்து விட்டு, உறுதிப்படுத்தல் என்பதை tick செய்து கீழே பதிவு செய்ய என்பதை கிளிக் செய்யவும்.



8) விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். 

9) அந்த குறிப்பு எண் வைத்து அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளவும். அல்லது கீழே உள்ள Link -ஐ கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தின் நிலை அறிய இங்கே கிளிக் செய்யவும்.



பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால் comment செய்யவும்.

இது போன்ற பயனுள்ள பதிவுகளை பெற செய்தி சுரபி பக்கத்தை Follow செய்யவும்.

Post a Comment

0 Comments