HOW TO APPLY PGTRB-2021

  TRB - 2021
          PG Assistant/Physical Education Director Grade -1 &  Computer Instructor Grade -1
      தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கத் தேவையானவை :

                  📌 Photo.
                  📌 Signature of the Applicant.
                  📌 Community Certificate.  
                  📌 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று.                       
                  📌 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று.
                  📌 UG Certificate & Consolidated Mark Sheet.
                  📌 PG Certificate & Consolidated Mark Sheet.
                  📌 B.ED Certificate & Consolidated Mark Sheet. 
                சான்றிதழ்கள் அனைத்தும் 60KB to 2MB என்ற அளவுகளில் PDF வடிவில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். 

CLICK HERE to Know About Notification and More Details.

விண்ணப்பிக்கும் முறை:

1) முதலில் Google Chrome-ல் trb.tn.nic.in என்று டைப் செய்து Search கொடுத்தால் வரும் முதல் வலைப்பக்கத்தை கிளிக் செய்யவும்.

2) Teachers Recruitment Board-ன் முகப்பு பக்கத்தில் Post Gratuate Assistant  2020-21 என்பதற்கு நேராக Online Application and Syllabus என்பதை கிளிக் செய்யவும்.




3) அடுத்த பக்கத்தில் Click here - Online Application என்பதை கிளிக் செய்யவும்.
4) அடுத்த பக்கத்தில் Application Login என்பதில் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்து இருந்தால் Registered Candidate என்பதை Select செய்யவும் அல்லது புதிதாக விண்ணப்பிப்பவர்கள் New User என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.


5) அடுத்து வரும் Login பக்கத்தில் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் என்றால் Register Now என்பதை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி Login செய்யவும்.


6) அடுத்து Instruction பக்கத்தில் உள்ளவற்றை கவனமாக படித்துவிட்டு படத்தில் உள்ளது போல Tick செய்து Continue என்பதை கிளிக் செய்யவும்.

7) New User Registration என்ற பக்கத்தில் உங்கள் விவரங்களை கவனமாக பூர்த்தி செய்யவும்.                



8) E-Mail ID மற்றும் Mobile Number ஆகியவற்றை பதிவு செய்து Send OTP என்பதை கிளிக் செய்து உங்கள் Mobile-க்கு வரும் OTP-ஐ Enter செய்து Captcha Code-ஐ பதிவு செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.


9) Registration செய்த பிறகு Registration Confirmation என்று திரையில் தோன்றும்.  அதில் உங்களுக்கான User Id மற்றும் Password கொடுக்கப்பட்டு இருக்கும்.  அதை சேமித்து வைத்துக் கொள்ளவும். மேலும் நீங்கள் பதிவு செய்த Mobile எண்ணுக்கு SMS மூலமும் User Id மற்றும் Password அனுப்பப்படும். பிறகு கீழே Please Click here to Login என்பதை கிளிக் செய்யவும்.


10) அடுத்ததாக உங்களுடைய User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி Login செய்யவும்.


11) அடுத்து Change Password என்ற Pop-up தோன்றும் அதில் Old Password என்ற இடத்தில் உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தியில் வந்த Password-ஐ Type செய்துவிட்டு New Password-ல் உங்களுக்கான புதிய Password-ஐ பதிவு செய்து Password மாற்றிக் கொள்ளவும். 


12) அடுத்து Instruction Page தோன்றும். அதில் படத்தில் உள்ளது போல டிக் செய்து Continue என்பதை கிளிக் செய்யவும்.


13) அதில் Personal Details என்ற பகுதியில் விடுபட்டுள்ள விவரங்களை மட்டும் பதிவு செய்யவும். 


14) நீங்கள் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவராக இருந்தால் Special Reservation Details For Secondary Grade Teacher என்ற பகுதியில் Yes என்பதை கிளிக் செய்து விவரங்களை பதிவிடவும். மற்றவர்கள் No என்பதை கிளிக் செய்யவும்.


15) அடுத்து Address Details என்ற பகுதியில் Permanent Address-ஐ பதிவிடவும் Address for Residential என்பதில் வேறு முகவரியாக இருந்தால் பதிவிடவும், ஒரே முகவரியாக இருந்தால் Same as Permanent Address என்பதை Tick செய்து Save & Continue என்பதை கிளிக் செய்யவும்.


16) அடுத்தாக EDUCATIONAL QUALIFICATION என்ற பகுதியில் Prescribed Educational Qualification Category என்ற பகுதியில் உங்களுக்கு பொருந்தக் கூடிய Category-ஐ Select செய்யவும்.


17) அடுத்து உங்களுடைய 10 மற்றும் 12ஆம் வகுப்பு கல்வி விவரங்களை உள்ளீடு செய்யவும்.


18) அடுத்து உங்களுடைய இளங்கலைப் பட்டம் ( Under Graduate) சார்ந்த விவரங்களை உள்ளீடு செய்யவும்.


19) அடுத்து உங்களுடைய முதுகலை பட்டம் (Post Graduate) சார்ந்த விவரங்களை உள்ளீடு செய்யவும்.

20) அடுத்து உங்களுடைய  இளங்கலை கல்வியியல் பட்டம் ( B.Ed) சார்ந்த விவரங்களை உள்ளீடு செய்யவும்.


21) அடுத்ததாக கீழே கேட்கப்பட்ட சில விவரங்களை பூர்த்தி செய்து Save & Continue என்பதை கிளிக் செய்யவும்.


22) அடுத்து Upload Photo என்ற பகுதியில் Choose File என்பதை கிளிக் செய்து சமீபத்திய புகைப்படத்தை கேட்கப்பட்ட அளவில் பதிவேற்றம் செய்து Continue என்பதை கிளிக் செய்யவும்.


23) அடுத்து Upload Signature என்ற பகுதியில் Choose File என்பதை கிளிக் செய்து உங்களது கையொப்பத்தை Scan செய்து கேட்கப்பட்ட அளவில் பதிவேற்றம் செய்து Continue என்பதை கிளிக் செய்யவும்.


24) அடுத்து Upload Documents என்ற பகுதியில் கேட்கப்பட்ட ஆவணங்களை கேட்கப்பட்ட அளவுகளில் PDF வடிவில் பதிவேற்றம் செய்யவும். விண்ணப்பதாரர் அரசு பள்ளி ஆசிரியராக இருக்கும் பட்சத்தில் அரசாணை எண். 110 தேதி 26.05.2017ன்படி இடைநிலை ஆசிரியருக்கான ஒதுக்கீடு கோருபவராக இருந்தால் பணி அனுபவ சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

Click here to Download Secondary Grade Teacher Service Certificate.


25) அனைத்து ஆவணங்களும் பதிவேற்றம் செய்த பிறகு Continue  என்பதை கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தின் Preview பக்கத்தில் விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்துக் கொள்ளவும்.


26)  கீழே கொடுக்கப்பட்டுள்ள Decleration-ஐ அனைத்தும் படித்து பார்த்து Tick செய்து Proceed to Payment என்பதை கிளிக் செய்தவுடன் Pop-up ல் Decleration தோன்றும். அதில் Submit என்பதை கிளிக் செய்யவும். அடுத்து Payment பக்கத்தில் உங்களுடைய Payment Option-ஐ Select செய்து விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும். (Online Mode Only)


27) விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய பிறகு கீழே படத்தில் உள்ளது போன்று Payment Message தோன்றும். மேலே View என்பதை கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை Download செய்து கொள்ளலாம்.  





















Post a Comment

0 Comments