RANDOM NUMBER-2021 RELEASED for BE

 


பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவா் சோ்க்கைக்கான ரேண்டம் எண்  வெளியிடப்பட்டுள்ளது.

 ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருக்கும் போது யாருக்கு முன்னுரிமை என்பதை தீர்மானிக்க  ரேண்டம் எண் முறை பின்பற்றப்படுகிறது. 

பி.இ, பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 24ம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில்,  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்திய  1.43  இலட்சம் பேருக்கு ரேண்டம் எண்  தற்போது   வெளியாகி உள்ளது.

பொறியியல் கலந்தாய்வை நடத்தும் தொழிநுட்ப கல்வி இயக்க ஆணையர்  அவர்கள்  இந்த ரேண்டம்  எண் பட்டியலை  வெளியிட்டுள்ளார்.

பொறியியல் படிப்புகளில் சேர கட்டணம் செலுத்தியவர்கள்  www.tneaonline.org  என்ற  இணையதளத்தில் தங்கள்   ரேண்டம் எண்ணைக் காணலாம்.


   






Post a Comment

0 Comments