CHANGE CARD TYPE

                                               அட்டை வகையை மாற்றுதல்             


                                       ரேஷன் கார்டுகள் மானிய விலையில் உணவு தானியங்களை பெற  மாநில அரசுகளால் மக்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும். ரேஷன் கார்டுகள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது விநியோக அமைப்பிலிருந்து    மக்களுக்கு வழங்கப்படுகிறது.   
                தமிழகத்தில்  குடும்ப அட்டைகள் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்கி கொள்ளலாம். தற்போது 2.12 கோடி ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.  நாம் பயன்படுத்தும் இந்த ரேசன் கார்டுகள் பார்க்க ஒன்றுபோல் இருந்தாலும், இதில் சில குறியீடுகள் உள்ளன. அந்த குறியீடுகளின் அடிப்படையில்  இந்த ரேசன் கார்டுகள் 5 வகைகளை கொண்டுள்ளது. அதாவது குடும்ப வருமானத்தை பொறுத்து இந்த ரேசன் கார்டுகளில் குறியீடுகள் அச்சிடப்பட்டு இருக்கும்.     
                தமிழ்நாட்டில் PHH, PHH - AYY, NPHH, NPHH - S, NPHH - NC ஆகிய ஐந்து வகையான குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன. 
                 
      PHH - என்ற குறியீடு இருந்தால் இந்த அட்டைக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய அனைத்து பொருள்களும் வாங்க முடியும்.
    PHH-AAY - என்ற குறியீடு இருந்தால் இந்த அட்டைக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அனைத்து பொருள்களோடு 35கிலோ அரிசியையும் வாங்க முடியும்.
       NPHH - என்ற குறியீடு இருந்தால் இந்த அட்டைக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய அனைத்து பொருள்களும் வாங்க முடியும்.
     NPHH-S - என்ற குறியீடு இருந்தால் அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் வாங்க முடியும்.
       NPHH-NC - என்ற குறியீடு இருந்தால் எந்த பொருட்களும் வாங்க முடியாது. இந்த அட்டையை அடையாள சான்று அல்லது முகவரி சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

அட்டை வகையை மாற்றம் செய்ய

  • அரிசி அட்டையை சர்க்கரை அட்டை(NPHH-S) (அ ) பண்டகமில்லா அட்டையாக(NPHH-NC)  மாற்றலாம். 
  • சர்க்கரை அட்டையை பண்டகமில்லா அட்டையாக மாற்றலாம். 
  •  AAY அட்டையை அரிசி அட்டை (அ ) சர்க்கரை அட்டை (அ )             பண்டகமில்லா அட்டையாக(NPHH-NC) மாற்றலாம்.                                                                                       
                                                            TNPDS என்ற இணையதளம் மூலம்  ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளலாம். அதனை ஆன்லைனில் கீழ்கண்ட  வழிகளில் எளிமையாக நாமே செய்து கொள்ளலாம்.

1) முதலில் www.tnpds.gov.in என்ற இணைய தளம் செல்லவும்.


2) அதில் அட்டை வகையை மாற்ற என்ற பகுதியை தேர்தெடுக்கவும்.


3) ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்-ஐ பதிவு செய்யவும். அடுத்து கேப்ட்சாவை பதிவு செய்து SUBMIT கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு 7 இலக்க OTP வரும். அதை  பதிவு செய்யவும்.


4) அடுத்து  சேவையை தேர்வு செய்யவும் என்ற பகுதியில் அட்டை வகை மாற்றம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.


5) அடுத்து அட்டை வகை மாற்றம் என்ற பகுதியில் தற்போதய 
அட்டை வகை என்ற இடத்தில் தற்போதய நிலையை சரி பார்த்து, புதிய அட்டை வகையை தேர்ந்தெடுக்கவும் என்ற இடத்தில் நீங்கள் மாற்ற விரும்பும் அட்டை வகையை தேர்ந்தெடுக்கவும், அடுத்து NFSA வகை என்ற இடத்தில் உங்களுக்கான குறியீடு காட்டப்படும்.


6) இறுதியாக உறுதிப்படுத்தல் என்ற பகுதியை டிக் செய்து பதிவு செய்ய என்பதை கிளிக் செய்யவும்.


7) விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். அந்த குறிப்பு எண் - ஐ வைத்து அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள். அல்லது கீழே உள்ள Link - ஐ கிளிக் செய்யவும்.

அட்டை தொடர்பான சேவை நிலை அறிய இங்கே கிளிக் செய்யவும்.


பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால் comment செய்யவும்.

இது போன்ற பதிவுகளை காண செய்திசுரபி பக்கத்தை FOLLOW செய்யவும்.

Post a Comment

0 Comments