HOW TO EDIT PROFILE IN TNPSC - 2021

                 TNPSC    இணையதளத்தில் Profile Edit செய்வது எப்படி?

1) உங்களுடைய மொபைல் அல்லது லேப்டாப்பில் Chrome Browser-ல் tnpsc.gov.in என்று டைப் செய்யவும். அதில் முதலில் வரும் website-ஐ கிளிக் செய்யவும்.



2) அடுத்து TNPSC முகப்பு பக்கத்தில் Candidate Corner என்ற பகுதியில் Registered User என்பதை கிளிக் செய்யவும்.


3) அடுத்த பக்கத்தில் ஏற்கனவே பதிவு செய்தோர் என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே பதிவு செய்யவில்லை எனில் அருகில் உள்ள புதிய பதிவு செய்ய விழைவோர் என்பதை கிளிக் செய்து PERMANENT REGISTRATION செய்து விட்டு பின்னர் இந்த பக்கத்திற்கு வரவும்.

PERMANENT REGISTRATION  ➡️➡️  CLICK HERE 


4) அடுத்து உள்நுழைக (Login) என்ற Pop-up தோன்றும். அதில் பயனாளர் குறியீடு  (User Code) மற்றும் கடவுச்சொல் (Password) உள்ளீடு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கான விடையை உள்ளீடு செய்து சமர்ப்பி (Submit) என்பதை கிளிக் செய்யவும். 


5) CANDIDATE DASHBOARD என்ற பக்கத்தில் EDIT PROFILE என்பதை கிளிக் செய்யவும்.


6) நீங்கள் உங்கள் PROFILE-ல் கடவுச்சொல் ( Password)-ஐ மாற்ற விரும்பினால்,            🖱️ கடவுச்சொல்லை மாற்றுக என்பதை கிளிக் செய்யவும்.
      🖱️ புதிய கடவுச்சொல் என்ற இடத்தில் புதிய கடவுச்சொல்லை Type   செய்யவும். 
      🖱️ மாற்றுக என்பதை கிளிக் செய்யவும்.


7) அடுத்து உங்கள் E-mail Id-ஐ மாற்ற விரும்பினால்,
         📬 மின்னஞ்சல் முகவரியை மாற்றுக என்பதை கிளிக் செய்து 
         📬 உங்களின் தற்போதைய மின்னஞ்சல் முகவரி என்ற இடத்தில் பழைய மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்யவும்.
         📬 புதிய மின்னஞ்சல் முகவரி என்ற இடத்தில் உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்யவும். 
         📬 மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும் என்ற இடத்தில் மீண்டும் உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்யவும். 
         📬 கீழே மாற்றுக என்பதை கிளிக் செய்யவும்.


8) அடுத்து உங்கள் MOBILE NUMBER-ஐ மாற்ற விரும்பினால்,
                📱 கைப்பேசி எண் மாற்றுக என்பதை கிளிக் செய்யவும்.
                📱 உங்கள் கைப்பேசி எண் என்ற இடத்தில் உங்களின் பழைய கைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும் அதை உறுதி செய்யவும்.
                📱 புதிய கைப்பேசி எண் என்ற இடத்தில் உங்களுடைய புதிய கைபேசி எண்ணை உள்ளீடு செய்யவும்.
                📱 OTP-ஐ அனுப்புவதன் மூலம் சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்து புதிய எண்ணிற்கு வரும் OTP-ஐ பதிவு செய்து மாற்றுக என்பதை கிளிக் செய்யவும்.


9) சுய விவரங்களை மாற்ற விரும்பினால், 
        ⏳ முதலில் சுய விவரங்களை மாற்றுக என்பதை கிளிக் செய்யவும்.
        Select என்பதை கிளிக் செய்து கீழ் உள்ள விவரங்களை நாம் மாற்றம் செய்து கொள்ளலாம்.
              💡 விண்ணப்பதாரரின் பெயர் 
              💡 தந்தையார் பெயர்
              💡 தாயார் பெயர்
              💡 பிறந்த தேதி
              💡 பாலினம்
              💡 திருமண நிலை
              💡 விண்ணப்பதாரர் பிறந்த மாவட்டம்
              💡 விண்ணப்பதாரர் பூர்வீக மாவட்டம்
              💡 தந்தையார் பிறந்த மாவட்டம்
              💡 தந்தையார் பூர்வீக மாவட்டம்
              💡 தேசிய இனம்
            ஆகியவற்றை நாம் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.


10) பள்ளி இறுதி வகுப்பு (SSLC) விவரங்களை மாற்ற அல்லது திருத்தம் செய்ய விரும்பினால்,
                📜 பள்ளி இறுதி வகுப்பு விவரங்கள் என்பதை கிளிக் செய்யவும்.
                📜 அதில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட விவரங்கள் திரையில் தோன்றும். அவற்றை உறுதி செய்யவும். 
                📜 கேட்கப்பட்ட விவரங்களை சான்றிதழ்களில் உள்ளவாறு சரியாக கொடுக்கவும்.
                📜 Browse file என்பதை கிளிக் செய்து அந்த ஆவணத்தை Scan செய்து பதிவேற்றம் செய்யவும்.
                📜 அனைத்தையும் சரிபார்த்துவிட்டு கோரிக்கையினை அனுப்புக என்பதை கிளிக் செய்யவும்.
                

11) உங்கள் புகைப்படம் அல்லது கையொப்பத்தினை மாற்றவோ அல்லது திருத்தம் செய்யவோ விரும்பினால்,
                    🖼️ புகைப்படம்/கையொப்பம் மாற்றுக என்பதை கிளிக் செய்யவும்.
                    🖼️ Choose file என்பதை கிளிக் செய்து Scan செய்து வைத்துள்ள புதிய புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்யவும்.
                    🖼️ அடுத்து புகைப்படம் மற்றும் கையொப்பத்தை மாற்றுவதற்கான காரணத்தை டைப் செய்யவும்.
                    🖼️ புகைப்படத்தை தெரிவு செய்க என்பதை கிளிக் செய்து விண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்யவும்.
                    

12) உங்கள் சாதிச் சான்றிதழை மாற்ற விரும்பினால்,
                🗒️ வகுப்பு மற்றும் சாதிச் சான்றிதழ் மாற்றுக என்பதை கிளிக் செய்யவும்.
                🗒️ கேட்கப்பட்ட விவரங்களை சான்றிதழ்களில் உள்ளவாறு சரியாக கொடுக்கவும்.
                🗒️ Browse file என்பதை கிளிக் செய்து அந்த ஆவணத்தை Scan செய்து பதிவேற்றம் செய்யவும்.
                🗒️ அனைத்தையும் சரிபார்த்துவிட்டு கோரிக்கையினை அனுப்புக என்பதை கிளிக் செய்யவும்.


13) உங்களுடைய தொடர்பு முகவரியை மாற்ற விரும்பினால்,
                 🏠 தொடர்பு முகவரியை மாற்றுக என்பதை கிளிக் செய்யவும்.
                 🏠 Present Data என்ற பகுதியில் உங்கள் பழைய முகவரி தோன்றும் அதை உறுதிபடுத்தவும்.
                 🏠 New Data என்ற பகுதியில் உங்கள் புதிய முகவரியை பதிவு செய்யவும்.
                 🏠 கோரிக்கையினை அனுப்புக என்பதை கிளிக் செய்யவும்.



14) உங்களுடைய தொடர்பு நிரந்தர முகவரியை மாற்ற விரும்பினால்,
                 🏠 தொடர்பு நிரந்தர முகவரியை மாற்றுக என்பதை கிளிக் செய்யவும்.
                 🏠 Present Data என்ற பகுதியில் உங்கள் பழைய முகவரி தோன்றும் அதை உறுதிபடுத்தவும்.
                 🏠 New Data என்ற பகுதியில் உங்கள் புதிய முகவரியை பதிவு செய்யவும்.
                 🏠 Browse file என்பதை கிளிக் செய்து புதிய முகவரிக்கான உரிய  ஆவணத்தை பதிவேற்றம் செய்யவும்.
                 🏠 கோரிக்கையினை அனுப்புக என்பதை கிளிக் செய்யவும்.



 

CREATE A PERMANENT REGISTRATION - 2021  ➡️➡️ CLICK HERE


ONE TIME REGISTRATION RENEWAL - 2021  ➡️➡️ CLICK HERE








Post a Comment

0 Comments