First Graduate certificate

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்:

 தமிழகத்தில் கல்வி அறிவில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுகிறது .

இந்த சான்றிதழ் மூலம், உயர்கல்வி பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் கல்வி கட்டண சலுகை அல்லது கல்வி  உதவித்தொகையைப் பெற்று பயன் அடையலாம்.  

தேர்தல் அறிக்கை: 

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்ட மன்ற திமுக  தேர்தல் அறிக்கையில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதை உறுதி செய்யும் வகையில் கடந்த சனிக்கிழமை அன்று  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த மனிதவள மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில்  அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

யார் முதல் தலைமுறை பட்டதாரி?   

                தமிழகத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்து முதன் முதலாக  பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த முதல் பட்டதாரி சான்றிதழை பெற தகுதி உடையவர். 

விண்ணப்பிக்க தகுதி:

1.விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

2. தங்கள் குடும்பத்தை சார்ந்த வேறு எவரும் பட்டதாரியாக இருக்கக்கூடாது.

3.தனது உடன்பிறந்தவர்கள் யாரும் இந்தச் சான்றிதழைப் பெற்றிருக்கக் கூடாது.


தேவையான ஆவணங்கள்: 

•போட்டோ

•ஆதார் அட்டை (Aadhar card)

• குடும்ப அட்டை ( Ration Card)

•பிறப்பு சான்றிதழ்

•விண்ணப்பதாரரின் மாற்று சான்றிதழ் (TC) மற்றும் 

•தந்தையின் மாற்று சான்றிதழ்

எப்படி விண்ணப்பிக்கலாம்:

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெற TNeGA இணையதளம் வழியாக ONLINE-ல் நமது Mobile அல்லது Laptop மூலமாக விண்ணப்பிக்க முடியும்.

1) உங்களுடைய மொபைல் அல்லது லேப்டாப்பில் Chrome Browser-ல் TNeSEVAI என்ற வெப்சைட்க்கு சென்று முதலில் வரும் பக்கத்தை Select செய்யவும்.


2) அடுத்து e-Sevai முகப்பு பக்கத்தில் பயனாளர் உள்நுழைவு என்பதை தேர்வு செய்யவும்.

 

3) அதில் Click here to Login என்பதை கிளிக் செய்தால் Login Page Open ஆகும் அதில் Login Id, Password and Captcha வை சரியாக பதிவிட்டு Login என்பதை கிளிக் செய்யவும்.


User Id create செய்வது மற்றும் CAN Number Registration செய்யவது பற்றி அறிய>>>>CLICK HERE




4) Login ஆன உடன் உங்களுக்கு Services என்ற பக்கம் Open ஆகும். அதில்  Department Wise என்ற பகுதியில் Revenue Department என்பதை தேர்வு செய்யவும்.

5) அடுத்து Revenue Department என்பதில்   FIRST GRAGUATE CERTIFICATE-ஐ Select செய்யவும்.


6) அடுத்து தேவையான ஆவணங்கள், கட்டணம் ஆகியவை காண்பிக்கப்படும் அதை கவனமாக படித்து பார்த்து விட்டு Proceed என்பதை கிளிக் செய்யவும்.


7)  CAN NUMBER ஏற்கனவே பதிவு செய்யாதவர்கள், Register Can என்ற பகுதியை தேர்வு செய்யவும்.

8) உங்களுக்கு ஏற்கனவே CAN NUMBER இருந்தால் கீழே கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து Search என்பதை கிளிக் செய்யவும்.




9) அடுத்து நீங்கள் பதிவு செய்த விவரங்களை மறுபடியும் திரையில் காண்பிக்கும் அதை சரிபார்த்து டிக் செய்து Generate OTP என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பபடும். வரும் OTP- ஐ பதிவு செய்யவும்.



10) அடுத்து விண்ணப்ப பக்கத்தில் ஏற்கனவே பதிவான பகுதிகளை சரிபார்த்து விட்டு மேற்கொண்டு கேட்கப்படும் விவரங்களை கவனமாக  பூர்த்தி செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.


11) அடுத்து குடும்ப உறுப்பினர்கள்  பெயரையும் அவர்களது விவரங்களையும் பதிவிட்டு பின்   ADD செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரையும் தனித்தனியே Add செய்ய வேண்டும்.

12) அடுத்து Educational Details என்ற பகுதியில் உங்களுடைய கல்வி தகவல்களை பதிவிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும். 

13) அடுத்து ஆவணங்களை பதிவேற்றம் செய்து Submit கொடுக்கவும்.



எவ்வாறு Document upload செய்வது
?
 14) Select Document என்பதில் என்ன ஆவணமோ அதை தேர்வு செய்து அதற்கு அடுத்ததாக உள்ள Document No என்ற இடத்தில் அந்த ஆவணத்தின் எண்ணை உள்ளீடு செய்யவும்.
பின் ADD கொடுத்து scan செய்து வைத்துள்ள சான்றிதழ்களை upload செய்ய வேண்டும்.


 அது போலவே ஒவ்வொரு Document-யும் Select செய்து பிறகு கீழே ADD மற்றும் UPLOAD என்பதை தேர்வு செய்தால் ஒவ்வொன்றாக பதிவேற்றம் அடையும்.

15) அனைத்து ஆவணங்களும் பதிவேற்றம் செய்ததும் Download Self Decleration Form என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட படிவம் Download ஆகும்.


  16) அதை Print எடுத்து உங்களுடைய தகவல்கள் சரியாக உள்ளதா என கவனமாக சரிபார்த்து கீழே கையொப்பமிட்டு மறுபடியும் Scan செய்து List of Documents என்ற பகுதியில் No.6 என்ற இடத்தில் Upload செய்ய வேண்டும்.



17) அடுத்து விண்ணப்பத்திற்கான கட்டணம் செலுத்தும் பக்கதை அடைவீர்கள். அதில் உங்கள் கட்டண முறையை தேர்வு செய்து சரியான தொகையை செலுத்தவும்.

13) விண்ணப்பித்த பின்னர் நமது விண்ணப்பத்தின் நிலையை அறிய கீழே காணும் படத்தில் உள்ள பக்கத்தில் சென்று Check Status என்பதை கிளிக் செய்து அறிந்த கொள்ளலாம்.




பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால் comment செய்யவும்.

இது போன்ற பதிவுகளை காண செய்திசுரபி பக்கத்தை FOLLOW செய்யவும்.











Post a Comment

0 Comments