REMOVE FAMILY MEMBER

ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்குதல்

         தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பொருட்கள் வாங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியே ரேசன் கார்டு அவசியமாகிறது. மேலும் வருமானச்  சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச்  சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ் போன்றவற்றை விண்ணப்பிக்கும்போது சமர்பிக்கக்கூடிய முக்கிய ஆவணமாகவும் ரேஷன் அட்டைகள் பயன்படுகிறது.

இப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில் ஏதேனும் திருத்தம் செய்யவோ, மாற்றம் செய்ய வேண்டுமெனில் பல நாட்கள் அலைய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது நாம் இருக்கும் இடத்தில் இருந்தே மொபைல் அல்லது லேப்டாப் மூலமாக திருத்தம் செய்து கொள்ள முடியும்.

பொதுவாக இது போன்ற முக்கிய ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் எனில், தாலுகா அலுவலகம் சென்று தான் மாற்ற வேண்டியிருக்கும். ஆனால் இன்றோ அப்படியில்லை. அனைத்துத்துறைகளும் அரசு டிஜிட்டல் மயமாக்கி வருகின்றது. அந்த வகையில் TNPDS என்ற இணையதளம் மூலம் நாமே ரேஷன் கார்டில் இருந்து குடும்ப உறுப்பினர் பெயரை நீக்குவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கம்:

ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயரை எப்படி ஆன்லைனில் நீக்கம் செய்வது என பார்க்க இருக்கிறோம். புதியதாக திருமணமானவர்கள்   தங்களது பழைய ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்கிய பின்னரே புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு புதிதாக திருமணமான காரணத்தினாலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு  காரணத்தினாலோ  ஒருவரின் பெயரை குடும்ப அட்டையிலிருந்து  நீக்கம் செய்யும் போது, அதனை ஆன்லைனில் கீழ்கண்ட வழிகளில் எளிமையாக நாமே செய்து கொள்ளலாம்.

உங்கள் மொபைலில் Chrome Browser -ஐ Open செய்து கொள்ளவும்.

1) www.tnpds.gov.in என்று டைப் செய்து Enter - ஐ கிளிக் செய்யவும்.


2) அதில் குடும்ப உறுப்பினர் நீக்க  என்ற பகுதியை தேர்தெடுக்கவும்.


3) ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யவும், அடுத்து கேப்ட்சாவை பதிவு செய்து Submit கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு 7 இலக்க OTP  எண்  வரும். அதை  பதிவுசெய்யவும்.



4) அதில் உங்கள் உறுப்பினர் விவரங்கள் வரும், அதில் சேவையை தேர்வு செய்யவும் என்ற இடத்தில் குடும்ப உறுப்பினர் நீக்க என்று இருக்க வேண்டும்.



5) அடுத்து மற்ற ஆவணங்கள் என்ற இடத்தில், கீழ்கண்ட ஆவணம் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து பதிவேற்றம் செய்யவும்.

  1. Death Certificate(இறப்பு சான்றிதழ்)
  2. Marriage Certificate (திருமண சான்றிதழ்)
  3. Adoption Certificate (தத்தெடுப்பு சான்றிதழ்)
  4. Others Certificate (இதர சான்றிதழ்)



6) அடுத்து
காரணம் என்ற இடத்தில் குடும்ப உறுப்பினரை நீக்க சரியான காரணத்தை டைப் செய்ய வேண்டும்.



7) அடுத்து குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள் வரிசையில் நீக்க வேண்டிய உறுப்பினருக்கு நேராக SELECT செய்து  கொள்ள வேண்டும். பிறகு அதன் கீழே  உறுதிப்படுத்தல் என்பதை TICK செய்து பதிவு செய்ய என்பதை கிளிக் செய்யவும்.


8) விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். அந்த குறிப்பு எண் - ஐ வைத்து அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள். அல்லது கீழே உள்ள Link - ஐ கிளிக் செய்யவும்.



அட்டை தொடர்பான சேவை நிலை அறிய இங்கே கிளிக் செய்யவும்.


பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால் comment செய்யவும்.

இது போன்ற பயனுள்ள பதிவுகளை பெற செய்தி சுரபி பக்கத்தை Follow  செய்யவும்.

Post a Comment

0 Comments