1 Lakh New Electricity Services to Farmers

விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய

மின் இணைப்புகள் - அமைச்சர்

செந்தில் பாலாஜி


தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி  அவர்கள் இன்று (7/9/2021) வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:



🔊டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 500 தொகுப்பு ஊதியம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். ரூ . 500 தொகுப்பு ஊதியம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.15.01 லட்சம் கூடுதல் செலவாகும்.


🔊எந்த நிலையிலும் ஆன்லைன் மூலம் மதுவிற்பனை இல்லை.


🔊வேளாண் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்.


🔊பல்வேறு மாவட்டங்களில் 7,500 மெகாவாட் மொத்த நிறுவுதிறன் கொண்ட 11 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அமைக்கப்படும்.


🔊உடன்குடி விரிவாக்க திட்டம் -2,3 அனல் மின் உற்பத்தி திட்டங்களை செயலாக்கத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.


🔊ரூ. 1979 கோடி மதிப்பீட்டில் 159 புதிய துணை மின் நிலையங்களை நிறுவ திட்டம்.


🔊தமிழகத்தில் தொழில்நுட்பம், வர்த்தக ரீதியிலான அடிப்படையில் சூரிய மின் சக்தி பூங்கா நிறுவப்படும். 


🔊4000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், 2000 மெகாவாட் சேமிப்பு திட்டத்துடன் நிறுவப்படும்.


🔊சென்னை மாநகரம் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகர பகுதிகளில் மேல்நிலை மின்பாதைகளை புதை வடங்களாக மாற்றப்படும்.


🔊ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் 110 கிலோ வாட் துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தல்.


🔊ரூ.679 கோடி மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் மற்றும் திறன் மேம்படுத்துதல்.


🔊ரூ.50 கோடி மதிப்பீட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் 2ல் உலர் சாம்பலை வெளியேற்றும் அமைப்பு அமைக்கப்படும்.


🔊ரூ.1,979 கோடி மதிப்பீட்டில் 159 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்படும் 




Post a Comment

0 Comments