20% Priority for Tamil Medium Candidates in TN Govt jobs

 

தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குதல் - அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் 

 தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின்  பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளது. 

அரசாணை  எண் & நாள்:

அரசாணை (நிலை) எண்:82,           நாள்: 16-08-2021 

என்ன தகுதி:

ஒன்றாம் வகுப்பு முதல், வரையறுக்கப்பட்ட  கல்வித்தகுதி வரையில் (10 மற்றும்  12-ஆம் வகுப்புகள், பட்டயம்,இளங்கலை மற்றும்  முதுகலைப் பட்டங்கள்) முழுவதுமாக தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின்  அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட தகுதியுடையவர்கள் ஆவர்.

யாருக்கு பொருந்தாது:

🔰இதர மொழிகளை பயிற்று மொழியாக (Medium of Instruction) கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்:

🔰1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக 10-ஆம் வகுப்பு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் மற்றும் பிற மாநிலங்களில், தமிழ் அல்லாமல் இதர மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, பின்பு இம்மாநிலத்தில் நேரடியாகச் சேரும் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்புகள் வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் இம்முன்னுரிமைக்கு தகுதியுடையவர்கள் அல்லர்.

தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்:

தேர்வர்கள் கல்வித் தகுதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை உறுதி செய்ய இயலாத நிலையில், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை, இணைப்புகள் - I மற்றும் II-ல் உள்ள படிவங்களில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.





மேற்படி தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில்  20 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடானது, நேரடி பணி நியமனத்திற்கான ஒவ்வொரு தெரிவு நிலையிலும் (முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் இதர நிலைகள்) பதவி வாரியாக பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.









Post a Comment

0 Comments