FAMILY HEAD CHANGE

                 

   குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய

                         தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பொருட்கள் வாங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியே ரேசன் கார்டு அவசியமாகிறது. மேலும் வருமான சான்றிதழ்,இருப்பிடச் சான்றிதழ், சாதிச்  சான்றிதழ்,பிறப்பிடச் சான்றிதழ் போன்றவற்றை விண்ணப்பிக்கும்போது சமர்பிக்கக்கூடிய முக்கிய ஆவணமாகவும் ரேஷன் அட்டைகள் பயன்படுகிறது.

இப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில் ஏதேனும் திருத்தம் செய்யவோ, மாற்றம் செய்ய வேண்டுமெனில் பல நாட்கள் அலைய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது நாம் இருக்கும் இடத்தில் இருந்தே மொபைல் அல்லது லேப்டாப் மூலமாக திருத்தம் செய்து கொள்ள முடியும்.

பொதுவாக இது போன்ற முக்கிய ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் எனில், தாலுகா அலுவலகம் சென்று தான் மாற்ற வேண்டியிருக்கும். ஆனால் இன்றோ அப்படியில்லை. அனைத்துத்துறைகளும் அரசு டிஜிட்டல் மயமாக்கி வருகின்றது. அந்த வகையில் TNPDS என்ற இணையதளம் மூலம் நாமே ரேஷன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் கார்டில் குடும்ப தலைவரை மாற்றம் செய்ய:

இன்று ரேஷன் கார்டில் குடும்ப தலைவரை ஆன்லைனில் மாற்றம் செய்வது  எப்படி என்று பார்க்க இருக்கிறோம். குடும்பத் தலைவர் வெளியூர் சென்று தங்கி வேலை பார்ப்பவராக இருக்கும் பட்சத்திலும், குடும்பத் தலைவர் முதியோராகவோ அல்லது மாற்றுத்திறனாளியாகவோ  இருக்கும் பட்சத்திலும் அவர்களால் மாதந்தோறும் ரேசன் கடைக்கு நேரில் சென்று கைரேகை வைத்து பொருள்கள் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதுபோன்ற சூழலில் வேறு உறுப்பினரை குடும்பத் தலைவராக மாற்றம் செய்வது கொள்ள முடியும். அதனை ஆன்லைனில் கீழ்கண்ட  வழிகளில் எளிமையாக நாமே செய்து கொள்ளலாம்.

முதலில் உங்களது மொபைல் அல்லது லேப்டாப்-ல் Google-ல் Chrome-

ஐ Open செய்து கொள்ளவும்.

1) www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்.


2) அதில்  குடும்பத் தலைவரை மாற்றம் செய்ய என்ற பகுதியை தேர்தெடுக்கவும்.


3) ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்-ஐ பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்ட்சாவை பதிவு செய்து பதிவு செய்ய என்று கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு  7 இலக்க OTP  எண்  வரும். அதை  பதிவுசெய்யவும்.


4)சேவையை தேர்வு செய்யவும் என்ற இடத்தில் குடும்பத் தலைவர் உறுப்பினர் மாற்றம் என்று தேர்வு செய்யவும். அடுத்து புதிய குடும்ப தலைவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும்.


5) அடுத்து காரணம் என்ற இடத்தில் சரியான காரணத்தை டைப் செய்து, மற்ற ஆவணங்கள் என்ற இடத்தில் கீழ்கண்ட ஏதேனும் ஆவணத்தை தேர்வு செய்து பதிவேற்றவும். பின்னர் உறுதிப்படுத்தல் என்ற பகுதியை டிக் செய்து பதிவு செய்ய என்பதை கிளிக் செய்யவும்.

  1. Aadhaar Card (ஆதார் அட்டை)
  2. Death Certificate(இறப்பு சான்றிதழ்)
  3. Divorce Certificate (விவாகரத்து சான்றிதழ்)
  4. No Objection Certificate from RI (வருவாய் ஆய்வாளர் தடையின்மைச் சான்றிதழ்)

5) விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். அந்த குறிப்பு எண் - ஐ வைத்து அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள். அல்லது கீழே உள்ள Link - ஐ கிளிக் செய்யவும்.


அட்டை தொடர்பான சேவை நிலை அறிய இங்கே கிளிக் செய்யவும்.


பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால் comment செய்யவும். 

இது போன்ற பயனுள்ள பதிவுகளை பெற செய்தி சுரபி  பக்கத்தை Follow செய்யவும்.


Post a Comment

0 Comments