Gold Bond Scheme Sep-2021

 Gold Bond Scheme Sep-2021

இந்த ஆண்டிற்கான ஆறாம் கட்ட தங்க பத்திர விற்பனை இன்று (30/08/2021)  தொடங்கியது. இன்று முதல் 03/09/2021 வரை 5 நாட்கள் தபால்  நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை செய்யப்படும்.

🔍மத்திய அரசு தங்க பத்திரம் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. 

 🔍தங்க பத்திர விற்பனையானது இன்று முதல் வருகின்ற செப்டம்பர் 3-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது 

🔍இதில் விற்கப்படும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,732/- ஆகும்.

🔍இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும்.

🔍முதலீட்டு தொகைக்கான  2.5 சதவீத வட்டியானது ஆறு மாதத்திற்கு ஒருமுறை முதலீட்டாளர் கணக்கில் செலுத்தப்படும். எட்டு ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளன்று உள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஐந்து ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளது.

🔍இந்த தங்க பத்திரத்தை சாதாரண தங்கத்தை போல வங்கிகளில் அடமானம்  வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் மிக நம்பிக்கையான முதலீடு ஆகும்.

எவ்வளவு வாங்கலாம்:

பொதுவாக ஒரு நிதியாண்டில்  ஒருவர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் நாலாயிரம் கிராம் வரை வாங்கிக் கொள்ளலாம். அதாவது ஒரு நபர் 4 கிலோ வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்து கொள்ளலாம்.

இரட்டை சேமிப்பு:

 நமது முதலீட்டிற்கு 6 மாதத்திற்கு ஒருமுறை வட்டி கிடைப்பதுடன், முதிர்வு காலத்தில் அப்போதைய தங்கத்தின் விலைக்கு நிகரான  மதிப்பை பெறலாம். இதனால் நமக்கு இரட்டை லாபம் கிடைக்கிறது.

தங்கப் பத்திரம் விண்ணப்பிக்க: 

இதற்கு விண்ணப்பிக்க, 

           ✏️ பான் கார்டு (கட்டாயம்) 

           ✏️ ஆதார் அட்டை,

           ✏️ வாக்காளர் அடையாள அட்டை,

           ✏️ பாஸ்போர்ட் 

         ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின்  நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுத்து தங்க பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் காலம்:

                   📆 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை - 5 நாட்கள்.

ONLINE - ல்  வாங்கலாம்:

இந்த தங்க பத்திரத்தை Online மூலமாகவும் வாங்க முடியும். இந்த தங்க பத்திரங்களை   ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பவர்களும்,   டிஜிட்டல்  முறையில் பணம் செலுத்தி தங்கப் பத்திரம் வாங்குபவர்களும்   கிராமுக்கு ஐம்பது ரூபாய் சலுகையும் பெற முடியும். 

      

Post a Comment

0 Comments