EMIS - VACCINATION DETAILS

EMIS - VACCINATION DETAILS UPDATE


 கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS)

இன்று கணினி பயன்பாட்டின் அடிப்படையில் எல்லா  துறைகளும்  Digital மயமாகிக் கொண்டு இருக்கிறது. கல்வி துறையிலும் கணினியின் தாக்கம் அளப்பறியது. கோப்புகள் மூலம் பராமரக்கப்பட்டு வந்த பள்ளி சார்ந்த  தகவல்கள் அனைத்தும் தற்போது EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. 

  இதில் பள்ளி சார்ந்த விவரங்கள்,  ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்களின் அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு இருக்கும். கல்வித் தகவல்களின் தரவு சேகரிப்பு, செயலாக்கம், பகுப்பாய்வு மற்றும் அறிக்கை தயார் செய்தல் போன்றவற்றினைத் தொகுத்து சேமித்து வைக்க இந்த தளம் பயன்படுத்தப்படுகிறது. 

மாணவர் சேர்க்கை,  Smart Identity Card, Online TC என அனைத்திலும் Emis வலைதளம் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் தற்போது விலையில்லா பாட புத்தகம், சீருடை போன்ற அரசின் திட்டங்கள் அனைத்தும் EMIS தரவுகளின் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. 

தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் சூழலிலும்  EMIS தளத்தில் அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது.  

EMIS- ல் Vaccination Details பதிவிடுதல்:

தற்காப்பு முறைகள்  மூலம் கொரோனா வைரஸ் பரவாமல்  தடுக்க முடியும் என்றாலும் COVID-19க்கு எதிரான போரில் தடுப்பூசிகள் மட்டுமே  தற்காலிக தீர்வாக இருக்கிறது. இது நோயின் தீவிரத்தை குறைக்கிறது மற்றும் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. . எனவே கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் தவறாமல் எடுத்து கொள்வது நல்லது என அரசு மக்களுக்கு பரிந்துரைக்கின்றது.

               கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் அல்லது இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட ஆசிரியர்கள் அந்த தகவல்களை EMIS இணையதளத்தில்  பதிவு செய்யும் Option தற்பொழுது  ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

   அதை கீழ்கண்ட முறையில் நாமே எளிதாக செய்யலாம். 

1. முதலில் உங்கள் மொபைலில் அல்லது லேப்டாப்பில் EMIS வளைதளத்திற்கு செல்லவும்.


2.Mobile phone-ல் பதிவு செய்பவர்கள் வலது பக்கத்தில் மேல் உள்ள 3 புள்ளிகளை Click செய்து Desktop site-ஐ Tick செய்யவும்.


3. பின்  ஆசிரியர்கள் தங்களுக்குக்கென வழங்கப்பட்ட EMIS STAFF ID மற்றும் PASSWORD மூலம் LOGIN செய்ய வேண்டும்.

 EMIS STAFF ID தெரியாதவர்களுக்கு  இதே பக்கத்தில் கீழ் பகுதியில்  STAFF ID எப்படி கண்டுபிடிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. 


4.அடுத்ததாக Vaccination Details என்ற பகுதியில் Have you Completed 1st & 2nd  Dose  என்ற பகுதியில் YES அல்லது NO என்பதை தேர்ந்தெடுத்து  கொள்ளவும்




5. அடுத்து Date of Dose 1 & 2 என்ற பகுதியில் நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேதியை பூர்த்தி செய்யவும்.


6. பின்  Name of Dose என்ற பகுதியில் நீங்கள் எடுத்துக் கொண்ட தடுப்பூசியின் பெயரை தேர்ந்தெடுத்து  Save என்பதை கிளிக் செய்யவும்.



குறிப்பு: 1.USER ID  (EMIS STAFF ID) தெரியாதவர்கள் EMIS இணையதளத்தில் பள்ளியின் Usre id and password கொடுத்து Login செய்து கொள்ளவும்.  

2.DASHBOARD-_ல் உள்ள SEARCH என்ற பகுதியில் STAFF என்பதை click செய்யவும்.


3.அடுத்து உங்கள் Mobile எண்,ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பதிவு செய்து SEARCH செய்யவும்.

   4.  அதன் கீழே தோன்றும் பகுதியில் உங்கள் 8 இலக்க  STAFF EMIS ID கொடுக்கப்பட்டு இருக்கும். 


5.PASSWORD- உங்கள் Mobile எண்ணின் முதல் 4 எண்கள் XXXX மற்றும் @ நீங்கள் பிறந்த வருடம் YYYY.

 Ex-(XXXX@YYYY)


பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால் comment செய்யவும்.


இது போன்ற பதிவுகளை காண செய்திசுரபி பக்கத்தை FOLLOW செய்யவும்.












Post a Comment

0 Comments