Whatsapp registration for Covid Vaccine

 

           கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள இனி வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் -மத்திய அரசு தகவல்

         இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில் Covid-19 தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின்     தடுப்பூசிகள்  போடப்பட்டு வருகிறது.

       தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

      இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '919013151515 என்ற எண்ணிற்கு ( MyGovIndia கொரோனா ஹெல்ப் டெஸ்கிற்கு) வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்புவதன்   மூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புபவர்கள்   தங்களுக்கான முன்பதிவை செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

      எனவே, நீங்கள் உங்களுக்கான  கோவிட் -19 தடுப்பூசியை இன்னும் போடவில்லை எனில், பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தி முன்பதிவு  செய்து கொள்ளுங்கள்.

9013151515 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் "BOOK SLOT" என்று குறுஞ்செய்தி அனுப்பவும்.

•குறுஞ்செய்தி அனுப்பிய உடன் MyGov உங்கள் தொலைப்பேசி எண்ணுக்கு  ஆறு இலக்க எண் SMS மூலம் வரும். அந்த எண்ணை whatsapp-ல்  உள்ளிடவும்.

•உங்கள்  தொலைப்பேசி எண்ணுடன் CoWin இணையதளத்தில் பதிவாகியிருக்கும் உறுப்பினர்களின் பட்டியலை MyGov காண்பிக்கும்.

•அடுத்து Menu என்று பதிவிட வேண்டும். Menu-வில் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

•தடுப்பூசிக்கான முன்பதிவிற்கு முதலில் எண்-2ஐ தேர்ந்தெடுத்து பின் எண்-3ஐ  தேர்ந்தெடுக்க வேண்டும்

•அடுத்து உங்களது பகுதி பின்கோடு (Pincode) உள்ளிடவும். 

•அதில் முன்பதிவிற்கான Link தோன்றும்.

•அதை Click செய்து உங்களுக்கு  ஏற்ற நாளை உறுதிசெய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் உறுதி செய்த அந்த குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.





Post a Comment

0 Comments