LIC lapsed policy revival Scheme 2021

எல்.ஐ.சி தனது  பாலிசிதாரர்களுக்கு  காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் சலுகைகளை தற்போது  வழங்கியுள்ளது.

காலாவதியான பாலிசிகள்   கொரோனா நோய் தொற்று மற்றும் தொடர் ஊரடங்கு காரணமாக பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,   பல எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் தமது காப்பீட்டு பிரீமியத்தை சரிவர செலுத்த முடியாமல்  உள்ளனர்.  அவர்களுக்கு உதவிடும் நோக்கில், இந்தியாவின் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் சலுகைகளை தற்போது பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளது.

கடைசி தேதி

இந்தச் சலுகை வருகின்ற  அக்டோபர் 22ம் தேதி வரை செல்லுபடியாகும். கடைசி பிரீமியம் செலுத்தப்பட்டு ஐந்து வருடத்துக்கு மேல் ஆகாத பாலிசிகளை இந்த சலுகையை பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ள முடியும்.

20 சதவீதம்

இவ்வாறு காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் போது அபராதக் கட்டணம் விதிக்கப்படும். அந்த அபராத கட்டணத்திலும் சில சலுகைகளை எல்.ஐ.சி வழங்குகிறது. அதன்படி, செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், அதற்கான அபராதத் தொகையில் 20சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும். அதிகபட்சமாக ரூ.2,000 வரை அபராதத் தொகையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று எல்.ஐ.சி அறிவித்துள்ளது.

25 சதவீதம்

அதேபோல் பிரீமியத் தொகை          ரூ.1 முதல் 3 லட்சத்திற்குள் இருந்தால், அபராதத் தொகையில் 25 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும்  அதிகபட்சம் ரூ. 2,500 வரை தள்ளுபடி வழங்கப்படும். 

30 சதவீதம்

மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் பிரீமியத் தொகை இருந்தால், அபராதத் தொகையில் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதிகபட்சம் ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பொருந்தாது

இந்த அபராதத் தொகைக்கான சலுகை டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் சில வகை அதிக ரிஸ்க் உடைய பாலிசிகளுக்கு பொருந்தாது. ஆனால், சில வகை மருத்துவ காப்பீடுகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும். அதனால், எல்.ஐ.சி. வாடிக்கையாளர்கள் காலாவதியான  தங்கள் பாலிசிகளை எல்.ஐ.சி வழங்கும் இந்தச் சலுகையை பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.



Post a Comment

0 Comments