உங்கள் பெயரில் இத்தனை SIM கார்டா?

 உங்கள் பெயரில் இத்தனை SIM கார்டா?

            உங்களுடைய பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும், உங்களுடைய அடையாள அட்டையை பயன்படுத்தி வேறு யாராவது சிம்கார்டுகள் வாங்கி உள்ளார்களா என்பதையும் அறிந்து கொள்வது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1) கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ பயன்படுத்தி உள்நுழையவும்.
அதில் Enter Your Mobile Number என்ற பகுதியில் உங்களுடைய பயன்பாட்டிலுள்ள ஒரு தொலைபேசி எண்ணை பதிவிட்டு Request OTP என்பதை கிளிக் செய்யவும். 



2) உங்களுடைய எண்ணுக்கு 6 இலக்க OTP அனுப்பப்பட்டிருக்கும். அவற்றை பதிவு செய்து Validate என்பதை கிளிக் செய்யவும்.


3) திரையில் உங்கள் பெயரிலோ அல்லது உங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி வாங்கப்பட்ட மொபைல் எண்கள் திரையில் தோன்றும். அவற்றில் நீங்கள் வாங்காத அல்லது பயன்படுத்தாத எண்ணை கண்டறிந்து கொள்ளலாம்.


4) அவ்வாறு நீங்கள் வாங்காத அல்லது பயன்படுத்தாத எண்ணை உங்கள் அடையாள அட்டையில் (Proof) இருந்து நீக்க விரும்பினால் படத்தில் உள்ளது போல அந்த எண்ணை TICK செய்து அதற்கு கீழ் உள்ள Option-ல் This is Not My Number என்பதை கிளிக் செய்து Report என்பதை கிளிக் செய்யவும்.
(குறிப்பு : அவ்வாறு Report செய்தால் ஒரு வாரத்தில் உங்களுடைய அடையாள அட்டையில் இருந்து நீக்கப்பட்டுவிடும்.)


5) நீங்களே ஒரு SIM கார்டை வாங்கி அதை தற்போது உபயோகிக்காமல் விட்டு விட்டால் அதையும் உங்கள் Proof-ல் இருந்து நீக்கி விடலாம்.
    மேலே செய்ததை போல அந்த எண்ணை Tick செய்து கீழே Not Required என்பதை கிளிக் செய்து Report என்பதை கிளிக் செய்யவும்.


6) நீங்கள் நீக்கிய Mobile Number உங்கள் அடையாள அட்டையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதா என்பதை அறிந்து கொள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள இடத்தில் நீக்கப்பட்ட அந்த மொபைல் எண்ணை பதிவிட்டு Track என்பதை கிளிக் செய்து Status-ஐ தெரிந்து கொள்ளலாம். 



Visit to Official Website : Click here

Post a Comment

0 Comments