TN-EMIS-ல் STUDENT PROFILE-ஐ UPDATE செய்வது எப்படி?

TN-EMIS

STUDENT'S PROFILE UPDATE

1) உங்கள் Mobile அல்லது Laptop-ல் Google Chrome-ல்  TNEMIS Website-ஐ Open செய்து USER NAME மற்றும் PASSWORD-ஐ டைப் செய்து Login-ஐ கிளிக் செய்யவும்.
 
2) Mobile phone-ல் பதிவு செய்பவர்கள் வலது பக்கத்தில் மேல் உள்ள 3 புள்ளிகளை Click செய்து Desktop site-ஐ Tick செய்யவும்.

                                     

3) EMIS முகப்பு பக்கத்தில் இடது புற Menu-வில் Students என்பதை கிளிக் செய்யவும். 


4) அதற்கு கீழ் Students List என்பதை கிளிக் செய்யவும்.


5) பிறகு மேலே கட்டமிட்டு காட்டப்பட்ட வகுப்பு தேர்வு செய்யும் இடத்தில் தேவையான வகுப்பை தேர்வு செய்யவும். பிறகு கீழே மாணவர்களின் பெயருக்கு நேராக உள்ள Edit(பென்சில்)பட்டனை கிளிக் செய்யவும்.


6) அடுத்து தோன்றும் திரையில் Students Personal Instructions என்று  கொடுக்கப்பட்டிருக்கும். அதில் 
  💡மாணவர்களின் புகைப்படம்
  💡பெயர் (தமிழ் & ஆங்கிலம்)
  💡ஆதார் எண் 
  💡பிறந்த தேதி
  💡பாலினம் 
  💡குருதி வகை
  💡Community 
ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை சரிபார்க்கவும். திருத்தங்கள் இருந்தால்  மேற்கொள்ளலாம்.

(குறிப்பு : மாணவர்களின் Initial பெயருக்கு பின்னால் குறிப்பிடவும் . புள்ளி வைக்க கூடாது. இடைவெளி விட்டால் மட்டும் போதும்.)


7) தொடர்ந்து கீழே நகர்த்தினால் Family Details பகுதியில் 
 💡 தந்தை பெயர் (தமிழ் & ஆங்கிலம்)
 💡 தாய் பெயர் (தமிழ் & ஆங்கிலம்)
 💡 பாதுகாவலர் பெயர் (இருப்பின்)
 💡   ஆண்டு வருமானம்
ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை சரிபார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.


8) பின் மீண்டும் கீழே நகர்த்தினால் Communication Details என்பதில்
 💡Mobile Number
 💡Address
 💡District
 💡Pincode
ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை சரிபார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.


9) கீழே நகர்த்தினால் Academic Information என்ற பகுதியில் 
  💡மாணவனின் வகுப்பு
  💡பிரிவு 
  💡சேர்க்கை தேதி
  💡Medium of Instruction
  💡சேர்க்கை எண் 
ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை சரிபார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.
   
   💡கட்டமிட்டு காட்டப்பட்ட பகுதியில் மாணவன் உங்கள் பள்ளியில் எந்த வகுப்பில் இருந்து படித்தார்களோ அந்த வகுப்பிற்கு "Medium" Select செய்யவும்.
 
இறுதியாக அனைத்தையும் சரிபார்த்து விட்டு "Update" என்பதை கிளிக் செய்யவும்.







 

Post a Comment

0 Comments