HOW TO APPLY INTER CASTE MARRIAGE CERTIFICATE ONLINE

ICM சான்றிதழ் (INTER CASTE MARRIAGE CERTIFICATE) விண்ணப்பிப்பது எப்படி?

தேவையான ஆவணங்கள்:

      ✅ கணவன்-மனைவி இணைந்து இருக்கும் புகைப்படம்

      ✅ அடையாளச் சான்று

      ✅ கணவனின் வகுப்புச் சான்றிதழ்

      ✅ மனைவியின் வகுப்புச் சான்றிதழ் 

      ✅ திருமண பதிவு சான்றிதழ் 

      ✅ சுய உறுதிமொழி படிவம்

எப்படி விண்ணப்பிக்கலாம்?

   1) உங்களுடைய மொபைல் அல்லது லேப்டாப்பில் Chrome Browser-ல்  www.tnesevai.tn.gov.in  என்ற வலைதளத்திற்கு சென்று முதலில் வரும் பக்கத்தை Select செய்யவும். 



2) அடுத்து e-Sevai முகப்பு பக்கத்தில்  பயனாளர் உள்நுழைவு என்பதை தேர்வு செய்யவும்.



3) Login Page Open ஆகும்.  அதில்   Login Id, Password and Captcha வை சரியாக பதிவிட்டு Login என்பதை கிளிக் செய்யவும். அல்லது Login with mobile Number என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டு OTP மூலமும் Login செய்யலாம்.




4) Login ஆன உடன் உங்களுக்கு  Services என்ற பக்கம் Open ஆகும். அதில்  Department Wise என்ற பகுதியில் Revenue Department  என்பதை தேர்வு செய்யவும்.


5) அடுத்து Revenue Department  என்பதில் INTER CASTE MARRIAGE(ICM) CERTIFICATE-ஐ Select செய்யவும்.


6) INTER CASTE MARRIAGE(ICM) CERTIFICATE-ஐ Select செய்தபின் விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவை திரையில் தோன்றும். அதை கவனமாக படித்து பார்த்து விட்டு Proceed என்பதை கிளிக் செய்யவும்.


7) அடுத்த பக்கத்தில், கணவன் மற்றும் மனைவிக்கு தனித்தனியே  CAN NUMBER பதிவு செய்யப்பட்டு இருந்தால்  அவற்றை பதிவிட்டு கேட்கப்பட்ட  மற்ற விவரங்களை பூர்த்தி செய்து   Search என்பதை கிளிக் செய்யவும்.
    
CAN NUMBER (Common Account Number) இல்லை என்றால்    இங்கே கிளிக் செய்து எவ்வாறு பதிவு செய்வது என்பதை அறிந்து CAN NUMBER-ஐ புதிதாக பதிவு செய்யவும்.



8) அடுத்து கணவரின்(Groom) விவரங்களை பதிவிட்டால் உங்கள் விவரங்கள் அடங்கிய அட்டவணை திரையில் தோன்றும். அதை கிளிக் செய்துவிட்டு கீழே MOBILE NUMBER-ஐ பதிவிட்டு Generate OTP என்பதை கிளிக் செய்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ பதிவு செய்து Confirm OTP என்பதை கிளிக் செய்யவும்.



9) Confirm OTP என்பதை கிளிக் செய்த பிறகு You have Successfully Verified OTP என்று திரையில் தோன்றும்.


10) அடுத்து மனைவியின்(Bride) விவரங்களை பதிவிட்டால் உங்கள் விவரங்கள் அடங்கிய அட்டவணை திரையில் தோன்றும். அதை
கிளிக் செய்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ பதிவு செய்து Confirm OTP என்பதை கிளிக் செய்யவும்.


11) Confirm OTP என்பதை கிளிக் செய்த பிறகு You have Successfully Verified OTP என்று திரையில் தோன்றும். அதன் பிறகு Proceed என்பதை கிளிக் செய்யவும்.


12) அடுத்து கணவரின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பம் திரையில் தோன்றும். அதில் Applicant Details (Groom), Residential Address ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கொள்ளவும்.


13) அடுத்து மனைவியின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பம் திரையில் தோன்றும் அதில் Applicant Details (Bride), Residential Address ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கொள்ளவும்.



14) அடுத்து Applicant Current Address பகுதியில் Same as Groom Address அல்லது Same as Bride Address இவற்றில் எது உங்களுக்கு பொருந்துமோ அதை Select செய்து முகவரி விவரங்களை பதிவு செய்யவும்.
       ⏩ அடுத்து Marriage Details என்பதில் திருமண விவரங்களை உங்கள்  திருமண பதிவு சான்றிதழில் உள்ளது போல சரியாக பதிவிடவும்.
       ⏩ Contact Details என்ற பகுதியில் உங்களுடைய Mobile Number மற்றும் E-Mail Id ஆகியவற்றை சரி பார்க்கவும்.
       Declaration என்ற பகுதியில் TICK செய்துவிட்டு Submit-ஐ கிளிக் செய்யவும்.


15) அடுத்து Upload Documents என்ற பகுதியில் கேட்கப்பட்ட ஆவணங்களை  கேட்கப்பட்ட அளவுகளில் பதிவேற்றம் செய்யவும். 

அதில் Select Documents என்ற பகுதியில் ஆவணத்தை தேர்வு செய்து, Document No என்ற பகுதியில் அந்த ஆவணத்தின் எண்ணை பதிவிட்டு கீழே உள்ள Add என்பதை கிளிக் செய்தால்  Upload என்ற பட்டன் தெரியும். அதை கிளிக் செய்யவும். 

குறிப்பு: அதில் 5வதாக உள்ள Self Decleration of Applicant என்ற பகுதிக்கு படத்தில் அம்புகுறியிட்டு காட்டப்பட்ட இடத்தில் கிளிக் செய்து Form-ஐ   Download  செய்து  Print எடுத்து அதில் Signature of the Applicant என்ற பகுதியில் கையெழுத்து போட்டு அதை   Scan  செய்து Upload  செய்யவும்.



16) அடுத்து நீங்கள் Upload செய்த அனைத்து ஆவணங்களும் கீழே படத்தில் உள்ளது போல காண்பிக்கப்படும்.  அவற்றை சரிபார்த்துவிட்டு Make Payment என்பதை கிளிக் செய்யவும்.




17) அடுத்து Payment Details என்ற பக்கம் தோன்றும். அதில் விவரங்களை சரிபார்த்து                         I Agree to Terms and Conditions என்பதை Tick செய்து  Make Payment என்பதை கிளிக் செய்யவும்.




18) அடுத்து Payment Page-ல் நீங்கள் எந்த வகை பரிவர்த்தனை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும். பிறகு தொகையை சரிபார்த்து விவரங்களை பதிவிட்டு Make Payment என்பதை கிளிக் செய்யவும்.




விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான இரசீதை                  (Receipt) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். Check Status என்ற பகுதியில் search செய்து நமது விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

CAN NUMBER பதிவு செய்ய ➡️ ➡️  CLICK HERE

TNeGA CHECK APPLICATION STATUS  ➡️ ➡️ CLICK HERE












Post a Comment

2 Comments

  1. Marriage certificate are official documents that declare two people are married. India has two Marriage Acts, the Hindu Marriage Act of 1955 and the Special Marriage Act of 1954, both of which govern marriages.
    Marriage certificate

    ReplyDelete
  2. It is common in India to have a court marriage. In 1954, the Special Marriage Act was passed in order to allow two parties who were interested in getting married, the Act allows marriages between parties of the same or different religions by civil ceremony.
    Court marriage certificate

    ReplyDelete